- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா... தக் லைப் படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும் இத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறதா......

அடேங்கப்பா… தக் லைப் படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும் இத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறதா… கேட்கும்போதே தல சுத்துதே சாமி…

- Advertisement -

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கமலஹாசன் மீண்டும் படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். சங்கருடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்தியன் 2 திரைப்படம் அண்மையில் வெளியானது. ஆனால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அது தூள் தூளாக்கியது.

 

இந்தியன் 2 திரைப்படத்தின் ஒரு சீன் கூட மனதிற்கு நெருக்கமாக இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். அது மட்டுமல்ல அதனை கேலி கிண்டலுக்கும் ஆளாக்கினர். இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல் மெட்டீரியலாக இந்தியன் 2 திரைப்படம் மாறியது.

 

இதன் நடுவே தெலுங்கில் பிரபாஸ் அமிதாபச்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான கல்கி திரைப்படத்திலும், ஒரு முக்கியமான கெட்டப்பில் கமல்ஹாசன் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் மணிரத்னத்துடன் இணைந்து தக்லைப் படத்தில் நடித்து வருகிறார்.

 

மணிரத்னத்தின் மெட்ராஸ் ஸ்டுடியோஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இதன் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

 

இதில் சிம்பு அசோக் செல்வன் திரிஷா அபிராமி நாசர் ஐஸ்வர்யா லட்சுமி கௌதம் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இந்த திரைப்படத்தின் மீது பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

அண்மையில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடையேயான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தக் லைப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும், 149 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு அந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெற்ற நிறுவனம் குறித்த தகவல் தற்போது கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் அதன் தொகை கோலிவுட் திரையுலகையே ஆச்சரியப்படும் அளவுக்கு அமைந்துள்ளது.

 

சற்று முன்