தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டுமே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முன்னணி ஹீரோக்களின் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ள வேளையில் இந்த 2023-ஆம் ஆண்டு இதுவரை வெளியாகியுள்ள படங்களில் முதல் நாளே அதிக கலெக்ஷனை எடுத்த ஐந்து திரைப்படங்களை இந்த பட்டியலில் காணலாம். அதன்படி அந்த ஐந்து படங்களுக்கான லிஸ்ட் இதோ :

1) ஜெயிலர் : நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான இந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படமானது வெளியான முதல் நாளே 91 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூல் செய்து இந்த ஆண்டு முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடம் பிடித்துள்ளது.
2) பொன்னியின் செல்வன் 2 : பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான இந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமானது கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியானது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் பிரபு என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படமானது முதல் நாளே 54 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

3) வாரிசு : வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஸ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரபு, எஸ்.ஜே சூர்யா போன்ற பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான இந்த வாரிசு திரைப்படமானது முதல் நாளே 47 கோடியே 20 லட்சம் ரூபாயை வசூல் செய்து இந்து பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
4) துணிவு : ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன், பிக்பாஸ் சிபி நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளே 39 கோடியே 60 லட்சம் வசூல் செய்து இந்த பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளது.
5) வாத்தி : வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஆடுகளம் நரேன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த படமானது கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகி முதல் நாளில் 14 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூல் செய்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





