- Advertisement -
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கேஎஸ் ரவிக்குமார் கலையரசன் யூகிசேது நரேன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். ஒரே இரவில் ரயிலில் நடக்கும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு டார்க் திரில்லர் கதைக்களத்தில் ட்ரெயின் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் நீண்ட காலமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் காலதாமதம் நீடித்தது. இந்த நிலையில் வருகிற டிசம்பர் 4ம் தேதி டிரெயின் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.





