தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமானவர் பிரபுதேவா. பிறகு பல படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். ஒரு கட்டத்தில் அவர் இயக்குனராகவும் மாறினார். விஜய் நடித்த வில்லு போக்கிரி போன்ற படங்களை அவரே டைரக்ட் செய்தார். குறிப்பாக போக்கிரி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே படத்தை இந்தியில் அக்சய் குமார் நடிக்க பிரபுதேவா டைரக்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு நடித்த தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அதே போல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த விஸ்வம்பரா படமும், சூர்யா நடித்து வரும் அவரது 45 படத்திலும் சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டில் வெளியான விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். அதே போல் மலையாளத்தில் இருந்து வெளியான ஐடென்டி படத்திலும் நாயகியாக திரிஷா நடித்திருந்தார். 3 படங்கள் வெளியான நிலையில் அடுத்த 3 படங்கள் திரிஷா நடிப்பில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெயம் ரவி திரிஷா நடிப்பில் வெளியான படம் உனக்கும் எனக்கும். இந்த படத்தில் கே பாக்யராஜ் பிரபு மௌலி கீதா சந்தானம் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா டைரக்ட் செய்திருந்தார்.
சம்திங் சம்திங் என்று முதலில் டைட்டில் வைக்கப்பட்டு பிறகு உனக்கும் எனக்கும் என பெயர் மாற்றம் செய்யபப்ட்ட இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தை தெலுங்கில் டைரக்ட் செய்தவர் நடிகர் பிரபுதேவா. நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா என்ற பெயரில் 2005ம் ஆண்டில் உருவான இந்த படத்தில் நாயகனாக சித்தார்த், நாயகியாக திரிஷா நடித்திருந்தனர்.
இந்த தெலுங்கு படத்தை தான் உனக்கும் எனக்கும் என்ற டைட்டிலில் ஜெயம் ரவி திரிஷா நடித்திருந்தனர். தெலுங்கு தமிழ் உள்பட இந்த படம் மொத்தம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலுமே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. திரிஷா நடித்த படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது மற்ற நாயகிகளுக்கு கிடைக்காத ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.





