தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் அருள்நிதி. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் என்ற படத்தில் அருள்நிதி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடித்திருந்தார். கஞ்சா கருப்பு அருள்நிதியின் நண்பராக காமெடி ரோலில் நடித்திருப்பார்.
முதல் படமே பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து அருள்நிதி பல படங்களில் நடித்தார். இதில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள் மாஸ் ஹிட் ஆன நிலையில் இப்போது டிமாண்டி காலனி 3ம் பாகமும் உருவாகி அடுத்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் வெளியான அருள்வான் படத்தில் அருள்நிதி கலெக்டர் கேரக்டரில் நடித்து பாராட்டை பெற்றிருந்தார். தொடர்ந்து ஹாரர் படங்களில் மட்டுமே நடிக்காமல் இதுபோன்ற வித்யாசமான கேரக்டர்களை அருள்நிதி தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். நடிகர் அருள்நிதி திமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்ககது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் நடிகர் தற்போதை திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, வம்சம் படத்தின் கதையை முதலில் இயக்குனர் பாண்டிராஜன் என்னிடம்தான் சொன்னார். குளத்துல குதிக்கணும். மாடு மேய்க்கணும். லுங்கி கட்டீட்டு நடந்து போகணும். மாட்டை பிடித்து கட்ட வேண்டும். மாட்டை குளத்தில் குளிப்பாட்ட வேண்டும் என்றெல்லாம் சொன்னார்.
சார் இதுக்கு சரியான ஒருத்தன் இருக்கான். எங்க குடும்பத்திலேயே அவன் இருக்கான். அவனுக்கு நடிக்கறதுலயும் இன்ட்ரஸ்ட் இருக்குது. எனக்கு அப்படியோ ஜாலியா நடிச்சுட்டு போற மாதிரி இருந்தா தான் நடிக்கறேன். நான் அப்போ அந்த மாதிரியான மைண்ட் செட்டுல தான் இருந்தேன். நமக்கு இது செட் ஆகாது.
இதுக்கெல்லாம் சரியான ஆளா என் தம்பி ஒருத்தன் இருக்கான் சார். அவன்தான் இதுக்கு சரியா இருப்பான். அவன்கிட்ட போய் சொல்லுங்கன்னு பாண்டிராஜை அருள்நிதியிடம் அனுப்பி வைத்தேன். அந்த படம் அருள்நிதி நடிச்சு பெரிய ஹிட் ஆயிடுச்சு. வம்சம் நான் பண்ண வேண்டிய படம் என்று உதயநிதி ஸ்டாலின் அதில் கூறியிருக்கிறார்.





