- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது - கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே! இன்று நான்...

எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது – கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே! இன்று நான் கவலைப்படாமல் என்ன செய்ய? – கவிஞர் வைரமுத்து கவிதை!

- Advertisement -

கவிஞர் வைரமுத்து தனது பதிவில் கூறியிருப்பதாவது, சாவாப் பாடல்கள் தந்த தேவா மறைந்துவிட்டார். தேனிசைத் தென்றல் நின்று போயிற்றா? நெஞ்சு கனக்கிறது. தன் பேச்சு மூச்சு அனைத்திலும் இசையாகவே இருந்தவர் சங்கீதத்தோடு இங்கிதம் தெரிந்தவர் பண்ணிசைக்கத் தெரிந்த பண்பாளர். அவரோடு நான் பணியாற்றிய அண்ணாமலை பாட்ஷா அருணாசலம் வாலி குஷி நேருக்கு நேர் ஆசை பஞ்ச தந்திரம் முதலிய நூற்றுக்கணக்கான படங்களின் பாட்டு வெற்றிக்கு தேவாவே காரணம் தேவாவின் இசையைப்போல் ரஜினிக்கு வேறு யாரும் பொருந்தவில்லை என்றுதான் ரசிகர்கள் பேசுவார்கள். என்ன சொல்வது? எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது. கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே! இன்றுநான் கவலைப்படாமல் என்ன செய்ய? என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்