- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனுடன் இணையும் படம்… இயக்குனர் வெங்கட்பிரபு எடுத்த அதிரடி முடிவு - இதுவரை இருந்த கூட்டணி...

சிவகார்த்திகேயனுடன் இணையும் படம்… இயக்குனர் வெங்கட்பிரபு எடுத்த அதிரடி முடிவு – இதுவரை இருந்த கூட்டணி மாறிப்போச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக ஆசைப்பட்டு நடிக்க வந்தவர் கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு. பெரியப்பா இளையராஜா உலகமே கொண்டாடும் இசைக்கலைஞர். அவரது சொந்த தம்பியான அப்பா கங்கை அமரனும் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர். கங்கை அமரன் சிறந்த பாடகரும் கூட. பல பாடல்களை அவரே எழுதியவர் என்பதால் கவிஞராகவும் பாராட்டப்பட்டவர்.

இப்படி சினிமா பின்புலத்தில் பிறந்து வளர்ந்த வெங்கட் பிரபுவுக்கு இயல்பிலேயே சினிமா மீது ஏற்பட்ட காதலால் நடிகராக அறிமுகமானார். உன்னைச் சரணடைந்தேன் படத்தில் நாயகனாக நடித்தார். ஏப்ரல் மாதத்தில் சிவகாசி போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் நடிகராக அவர் பெரிய வரவேற்பை பெற முடியவில்லை.

- Advertisement -

தொடர்ந்து சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி. அடுத்து சரோஜா கோவா சென்னை 28 படம் 2ம் பாகம் மாசு என்கிற மாசிலாமணி மங்காத்தா மாநாடு என பல படங்களை தந்த அவர் கடைசியாக இயக்கி வெளியான படம் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட் ) படமாகும்.

இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. வழக்கமாக யுவனின் சித்தப்பா கங்கை அமரனின் மகன் மற்றும் சகோதரர் வெங்கட்பிரபு இயக்கும் படம் என்றாலே, அதில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளராக இருப்பார்.

- Advertisement -

ஹீரோ கால்ஷீட்டுக்கு முன்பாக யுவனின் கால்ஷீட்டைதான் வெங்கட்பிரபு புக் செய்வார். ஆனால் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்கும் நிலையில், அனிருத் இசையமைக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த முறை வெங்கட்பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி உடைந்திருக்கிறது. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களுக்கு அனிருத் இசையமைத்த வகையில் அந்த படம் மாஸ் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. அதனால் வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் விரும்பியதால் வேறு வழியின்றி தனது சகோதரர் யுவனை நிராகரித்து விட்டு, இந்த புதிய படத்துக்கு இசையமைக்க அனிருத்துக்கு வெங்கட்பிரபு ஓகே சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்