- Advertisement -
காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த யூத் படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜன் வகையறா படத்தில் கென் கருணாஸ் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெற்றிமாறன் கென் கருணாஸ் சாய் அபயங்கர் மூவரும் பங்கு பெறும் பிரமோ ஷூட் நடந்து வருகிறது. இதில் படக்காட்சிகள் வராது. இவர்கள் 3 பேர் மட்டுமே வரும் வகையில் இது தயார் செய்யப்படுகிறது. இந்த பிரமோவுக்கான ஸ்கிரிப்ட் தயார் செய்து அதை இயக்குபவர் கென் கருணாஸ் தான். மேலும் எடிட்டிங்கும் கென்தான் செய்ய உள்ளார். இயக்குனர் வெற்றிமாறனை பிரமோ ஷூட்டுக்காக கென் கருணாஸ் இயக்குகிறார். இந்த பிரமோ வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகிறது.





