சினிமாவில் ஒருவர் இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக வந்து ஜெயித்து விட்டால் அதன்பிறகு அந்த குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அல்லது வரிசையாக கலைத்துறைக்கு சிலர் வருவது வழக்கமாக நடந்து வருகிறது. அப்படி நிறைய பேர் வாரிசு கலைஞர்களாக தமிழ் சினிமாவில் இப்போது இருந்து வருகின்றனர்.
இதில் பல பெரிய அளவில் பல நடிகர்கள் நடிகைகள் ஜெயித்திருக்கின்றனர். ஒரு சிலர் வந்தவுடன் சில படங்களிலேயே காணாமல் போயிருக்கின்றனர். திறமையும் உழைப்பும் இருந்தால் மட்டுமே இங்கே ஜெயித்து நிலைக்க முடியும். அந்த வரிசையில் நடிகர்களின் மகன்கள், நடிகைகளின் மகள்கள் திரைப்படங்களுக்கு வந்து பெரிய அளவில் ஜெயித்திருக்கிறார்கள்.
குறிப்பாக நடிகர் சிவாஜி கணேசன் மகன் பிரபு நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மகன் விஜய் என இப்படி பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனரின் மனைவி இப்போது சினிமா நடிகையாக களத்தில் இறங்கி இருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ள படம் அண்டர் 18. இந்த படத்தில் விக்ராந்த் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு படங்களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குனர் வெற்றிமாறனின் அசோசியேட் டைரக்டர் கார்த்திக் பெருமாள் சாமி இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இது அவரது முதல் படமாகும். இந்த படத்தில் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் ஜட்ஜ் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் வெற்றிமாறனுக்கும் அசோசியேட்டாக அவரிடம் பணிபுரிந்த கார்த்திக் பெருமாள் சாமிக்கும் இடையே தொழில் ரீதியாக மட்டுமின்றி அதையும் கடந்து குடும்ப ரீதியாகவும் ஒரு நண்பராக அவர் இருப்பதால் அவர் இயக்கம் முதல் படத்தில் ஜட்ஜ் கேரக்டரில் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





