- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களுக்கு அதிர்ச்சி.. விடாமுயற்சி டீமில் நிகழ்ந்த சோகம்.. கலை இயக்குநர் மரணம்..

ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. விடாமுயற்சி டீமில் நிகழ்ந்த சோகம்.. கலை இயக்குநர் மரணம்..

- Advertisement -

லைகா தயாரிப்பில் அஜித் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இது அவரது 62ஆவது படமாக உருவாகிவருகிறது. முதலில் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாம் பாதியை லைகா மாற்ற சொல்லியதால் படத்திலிருந்து வெளியேறினார். இதனையடுத்து மகிழ் திருமேனி படத்திற்கு இயக்குநராக கமிட்டானார்.

அவர் இயக்குநராக கமிட்டானதை அடுத்து படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சோர்வின் உச்சத்துக்கே சென்றிருக்கின்றனர்.

இதற்கிடையே அஜித்குமார் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவரால்தான் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதாக பலரும் கூறினார்கள். ஆனால் படப்பிடிப்பு தாமதத்துக்கு காரணம் அஜித் இல்லை லைகா தரப்பில் கொஞ்சம் பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அதனால்தான் இந்தத் தாமதம் என்று திரைத்துறையிலிருந்து ஒருதரப்பினர் கூறினர்.

இந்நிலையில் சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.மேலும் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் அஜர்பைஜானில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி ட்ரெண்டானது. எனவே ஷூட்டிங் தொடங்கியது உறுதிதான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இருந்தாலும் அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வரவில்லையே என்று கவலையிலும் இருக்கின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கும் மேலும் ஒரு கவலை தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். கலை இயக்குநர் சாபு சிரிலின் உதவியாளராக திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் மிலன்.

அதன் பிறகு பில்லா, வீரம், வேதாளம், துணிவு என அஜித்தின் படங்களுக்கும் கலை இயக்குநராக பணியாற்றி பட்டையை கிளப்பினார். தற்போது விடாமுயற்சி படத்திலும் கலை இயக்குநராக கமிட்டானார். அஜர்பைஜானில் ஷூட்டிங்கில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது. இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்