- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவன் தலைவி வெற்றி தந்த உற்சாகம்… மீண்டும் கைகோர்க்கும் நடிகர் விஜய் சேதுபதி - இயக்குனர்...

தலைவன் தலைவி வெற்றி தந்த உற்சாகம்… மீண்டும் கைகோர்க்கும் நடிகர் விஜய் சேதுபதி – இயக்குனர் பாண்டிராஜ், இன்னொரு டிவிஸ்ட்டும் இருக்குது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். பசங்க மெரினா நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் இது நம்ம ஆளு வம்சம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தந்தவர். கடைசியாக அவரது இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படம் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளியது.

கணவன் மனைவியை சண்டையை குடும்ப பின்னணி பிரச்னைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதைக்களத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதியும் அவரது மனைவியாக நித்யாமேனனும் இந்த படத்தில் அதகளம் செய்திருந்தனர். படம் முழுக்க இருவரும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தையும் தாண்டி இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தில சரவணன் தீபா ஆர்கே சுரேஷ் யோகிபாபு காளிவெங்கட் மைனா நந்தினி சித்ரா லட்சுமணன் பிஎல் தேனப்பன் சென்ட்ராயன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 2 குடும்பங்களுக்குள் ஏற்படும் உறவு சிக்கல்களை அதனால் ஏற்படும் பிரச்னைகளை சொன்ன இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற லேட்டஸ்ட் தகவலும் கிடைத்துள்ளது., லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த நிறுவனம். ஆனால் ஒரு காலகட்டத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரித்த பெரிய படங்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

தர்பார் லால்சலாம் இந்தியன் 2 கேம் சேஞ்சர் விடாமுயற்சி பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களின் படுதோல்விகளால் பலத்த நஷ்டத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தை தயாரிக்க இப்போது முன்வந்துள்ளது. இந்த படத்தின் ஆரம்ப பட்ஜெட் 70 கோடி ரூபாய் என திட்டமிட்ட நிலையில் செலவுகளை குறைத்து இப்போது 62 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா புரடக்சன்ஸ் இதை தயாரிக்கிறது.

தலைவன் தலைவி வெற்றிக்கு பிறகு இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். மீண்டும் அவரது படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார். படத்தின் கதாநாயகி மற்றும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு இப்போது நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் தெலுங்கு படம் உள்ளிட்ட சில படங்களை முடித்துவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் மற்றொரு நட்சத்திர நடிகரும் நடிக்க பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்