- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவன் தலைவி படத்துக்கு கிடைத்த அபார வெற்றி… மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - பாண்டிராஜ்...

தலைவன் தலைவி படத்துக்கு கிடைத்த அபார வெற்றி… மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி, அட இந்த படத்தில் அவரும் நடிக்கிறாரா?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டில் வெளியான மகாராஜா படம் பெரிய வெற்றியை பெற்றது. இது அவரது 50வது படமாக இருந்தது. ரசிகர்களின் ஆரவாரமான ஆதரவால் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த 51வது படம் ஏஸ் படம் இந்த ஆண்டில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் வந்ததே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும், நடிகை நித்யா மேனன் நாயகியாகவும் நடித்த தலைவன் தலைவி படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த படம் இதுவரை 40 கோடி ரூபாய்க்கு வசூலை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை டைரக்ட் செய்தார். இந்த படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான தலைவன் தலைவி படம் வேற லெவலில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

எப்போதுமே ஒரு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த இயக்குனர், ஹீரோ மீண்டும் இணைந்து அடுத்த படத்தை தருவது தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் ஆகவும் வியாபார ரீதியாக மீண்டும் ஒரு கணிசமான லாபத்தை அடைய எடுக்கப்படும் முயற்சியாகவும் இருக்கிறது. இப்படி பல படங்கள் ஜெயித்திருக்கின்றன.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டிராஜ் மீண்டும் இணைகின்றனர். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக மீண்டும் நித்யா மேனனே நடிக்க வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிகர் மணிகண்டன் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே ஜெய்பீம் குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்தவர் நடிகர் மணிகண்டன். இப்போது விஜய் சேதுபதியுடன் 2வது முறையாக நடிக்க உள்ளார். ஏற்கனவே காதலும் கடந்து போகும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் மணிகண்டன் இணைந்து நடித்திருந்தார். மணிகண்டன் வளரும் இளம் நடிகராக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்