இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை எல்ரட் குமார் தயாரித்திருந்தார். ஏறக்குறைய இந்த படங்கள் நான்கரை ஆண்டுகள் வை படமாக்கப்பட்டு திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் விடுதலை முதல் பாகம் வரவேற்பை பெற்ற அளவுக்கு விடுதலை 2ம் பாகம் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சிம்பு நடிக்கும் அரசன் படத்தையும் நடிகர் கென் கருணாஸ் நடிக்கும் ராஜன் வகையறா என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடியவே இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த படங்களை தொடர்ந்து அவருக்கு தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள வடசென்னை 2 தமிழ் முருகன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கின்றன. இந்த படங்களை அவர் இயக்கி முடிக்க வேண்டும். ஆனால் இப்போது நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கமிட் செய்திருக்கிறார்.
இந்த படத்தை விடுதலை படத்தை தயாரித்த எல்ரட் குமார்தான் தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் வெற்றிமாறன் விஜய் சேதுபதி எல்ரட் குமார் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. இவர்கள் காம்போவில் விடுதலை படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் விடுதலை 2 படம் பலத்த தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வணிக ரீதியாக இந்த படங்கள் பெரிய ஏமாற்றத்தை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களின் மொத்த பட்ஜெட் 120 கோடி ரூபாய். இதில் விடுதலை படம் 70 கோடி ரூபாய் வருமானமும் விடுதலை 2 படம் ரூ. 60 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டியது. அதனால் பெரிய லாபம் இல்லை என்றாலும் இந்த படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை எல்ரட் குமார் தயாரிக்கிறார். ஆனால் இந்த படம் குறுகிய கால படமாக தான் இருக்கும். விடுதலை படம் போல நான்கரை ஆண்டுகள் என அதிக காலம் நீடிக்காது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. படப்பிடிப்பு நடக்கும்போது தான் தீர்மானிப்பார்கள் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.





