திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது மனைவி கிருத்திகா உதயநிதி தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் படங்களை தயாரித்து, டைரக்ட் செய்து வருகிறார். ஏற்கனவே வணக்கம் சென்னை காளி ஆகிய 3 படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. ரவி மோகன், நித்யாமேனன் நாயகன் நாயகியாக நடித்த இந்த படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.
தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வரும் ரவி மோகனுக்கு இனி வெற்றி படமாகவும் இல்லாமல் தோல்வி படமாகவும் இல்லாமல் ரசிகர்களின் கவனம் பெற்ற படமாக அமைந்தது. காதல் திருமணம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விஷயங்களை மையப்படுத்தி வித்யாசமான கதை களத்தில் இந்த படத்தை கிருத்திகா உதயநிதி உருவாக்கி இருந்தார்.
சினிமா இயக்குனர் மட்டுமின்றி ஜி5 ஓடிடி தளத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கிய வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட் என்ற பெயரில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்த சினிமா தளத்தில் பரபரப்பாக இயங்கி வரும் கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படத்தை இயக்க இப்போது தயாராகி வருகிறார்.
கடந்த ஆண்டில் மகாராஜா என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இது அவரது 50வது படமாகவும் இருந்தது. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் பரோட்டா மாஸ்டராக நடித்து வருகிறார். இதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 வெற்றிக்கரமாக தொகுப்பாளராக நடத்தி முடித்த நடிகர் விஜய் சேதுபதி அடுத்து இயக்குனர்கள் எஸ்ஆர் பிரபாகரன் ( சுந்தரபாண்டியன் படம்) பாலாஜி தரணிதரன் ( நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்படம் ) ஆகியோர் இயக்கும் புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இப்போது காதலிக்க நேரமில்லை படத்துக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்கிறார். இதற்காக விஜய் சேதுபதியிடம் அவர் கதை சொல்ல, அவரும் ஓகே சொல்லி இருக்கிறார். அதனால் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக கிருத்திகா உதயநிதி ஈடுபட்டு வருகிறார். மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.





