ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களின் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. ஏஜிஎஸ் என்டர்டைன் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், சினேகா பிரபுதேவா பிரசாந்த் லைலா மீனாட்சி சௌத்ரி வைபவ் அஜ்மல் மைக் மோகன் வி டிவி கணேஷ் யோகி பாபு பிரேம்ஜி அமரன் அரவிந்த் ஆகாஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்த திரைப்படத்தின் விஜயை, 23 வயது இளைஞராக காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. ஸ்பார்க் பாடலில், அவரின் கெட்டப் மிகவும் மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இதை எடுத்து படத்தின் டிரைலரில், சில காட்சிகளில் விஜய்யை சரியாக காட்டுவதற்காக நேரம் எடுத்துக் கொண்டதாகவும், ட்ரெய்லரில் இருக்கும் விஜயே படத்திலும் இருப்பார் என்றும் வெங்கட் பிரபு கூறி இருந்தார்.
படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த நடிகர் விஜய்காந்தை இடம்பெற செய்து இருக்கிறார்கள். இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தினார். இதை எடுத்து விஜயகாந்த் இல்லத்திற்கு, வெங்கட் பிரபு விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சென்றனர்.
அப்போது விஜயகாந்த் உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்திடமும் அவர் நன்றி கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. இது ஒரு பக்கம் இருக்க கோட் திரைப்படத்தை வரும் ஐந்தாம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தணிக்கை குழு அந்த திரைப்படத்திற்கு, யு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தி இருக்கும் வெங்கட்பிரபு அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில், கோட் திரைப்படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் இருப்பதால், இவ்வளவு நீளமாக படம் இருக்குமா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.





