- Advertisement -
Homeபொழுதுபோக்குலால் சலாம் படப்பிடிப்பை நிறைவுசெய்த விஷ்ணு விஷால். அதை எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க - வைரலாகும்...

லால் சலாம் படப்பிடிப்பை நிறைவுசெய்த விஷ்ணு விஷால். அதை எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க – வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதோடு இவர்களுடன் சேர்ந்து சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முற்றிலுமாக முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு சேர்ந்து முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவும் ஒரு சில காட்சியில் நடிக்கிறார் என்ற தகவலும் இந்த படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது.

- Advertisement -

அதோடு இந்த படத்தில் ரஜினி “மொய்தீன் பாய்” கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்துள்ள இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் திருவண்ணாமலை நகரினை சுற்றி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

- Advertisement -

அந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்த வேளையில் அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர். இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் புதிய அறிவிப்பாக நடிகர் விஷ்ணு விஷால் தனது பகுதி காட்சிகளை முற்றிலுமாக “லால் சலாம்” படத்தில் நிறைவு செய்துள்ளார். அதனை அவரே உறுதிசெய்து “லால் சலாம்” என்கிற கேக்கை மனைவியுடன் வெட்டி கொண்டாடியுள்ளார்.

மேலும் அதில் : இந்த படத்தில் தன்னுடைய வேலைகள் முடிந்து விட்டதாகவும் இந்த பயணம் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் மகிழக்கூடிய ஒன்றாகவும் இருந்ததாகவும் இந்த படத்தில் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்து சில புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஷ்ணு விஷால் அவரது மனைவி மற்றும் செல்ல நாயுடன் கேக்கை வெட்டி கொண்டாடும்படி இருக்கும் புகைப்படங்கள் அவரே பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்