- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவருக்கே இப்படி ஒரு நிலமையா? ரொம்ப கஷ்டமாக இருக்குது - ரஜினி குறித்து பேசி வருத்தப்பட்ட...

தலைவருக்கே இப்படி ஒரு நிலமையா? ரொம்ப கஷ்டமாக இருக்குது – ரஜினி குறித்து பேசி வருத்தப்பட்ட கட்டா குஸ்தி நடிகர்!

- Advertisement -

இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். கபடி விளையாட்டை மையப்படுத்திய இந்த படம் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்த படத்தில் காமெடியனாக நடித்த சூரிக்கு பரோட்டா சூரி என்ற அடையாளமும் கிடைத்தது. இப்போது அவரும் ஒரு முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார். வெண்ணிலா கபடிக்குழு படத்துக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடித்த பல படங்கள் நல்ல வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தன.

- Advertisement -

குள்ளநரி கூட்டம் முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை ராட்சசன் சிலுக்குவார் பட்டி சிங்கம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் மரகதநாணயம் மாவீரன் கிட்டு லால் சலாம் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றி படங்களாக அமைந்து. இந்த வெற்றிப் படங்களால் அவர் ஒரு ஹீரோ நடிகர் அந்தஸ்தை பெற்றார்.

இந்தநிலையில் அவர் நடித்த கட்டா குஸ்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இப்போது கட்டாகுஸ்தி 2ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற ஜூலை 3ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு ஆட்டோஇம்மியுனோ என்ற நோய் பாதிப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். 34 ஆண்டுகளாக இந்த நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி 2 படம் குறித்த பிரமோசன் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, இதை சொல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் சொல்கிறேன். தலைவரே மைக்கை புடிச்சுகிட்டு நான் விஜய்க்கு எதிரானவன் இல்லைன்னு சொல்கிற நிலைமைதான் இன்னைக்கு இருக்குது.

அப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தலைவரே நாலு நாள் அமைதியாக இருந்தால் அவரை பத்தி தப்பு தப்பான விஷயத்தை ஆன்லைனில் கொண்டு வந்துடுறாங்க. அவரே வேற வழியில்லாம நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்ன்னு சொல்ற அளவுக்கு இப்போ ஆயிடுச்சு. அதெல்லாம் பார்க்கவே ரொம்பவும் கஷ்டமா இருக்குது என்று நடிகர் விஷ்ணு விஷால் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அந்த நேர்காணலில் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்