- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 நாட்களில் யூத் படம் வசூல் நிலவரம், ஹீரோ மற்றும் டைரக்டராக பட்டைய கிளப்பிய கென்...

3 நாட்களில் யூத் படம் வசூல் நிலவரம், ஹீரோ மற்றும் டைரக்டராக பட்டைய கிளப்பிய கென் கருணாஸ் – இது வேற லெவல் சம்பவமா இருக்கே ப்ரோ…?

- Advertisement -

எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தவற விட்டது இல்லை. அதே நேரத்தில் மோசமான படங்களை அவர்கள் ஜெயிக்க வைப்பதும் இல்லை. ஆனால் பெரிய நட்சத்திரங்கள் பெரிய இயக்குனர் பெரிய இசையமைப்பாளர் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்று பில்டப் செய்து விடுகின்றனர்.

தொடர்ந்து பிரமோசன்களால் பில்டப் செய்யும் விமர்சனங்களால் ரசிகர்களிடம் வைப் ஏற்றி சில டப்பா படங்களை வணிக ரீதியாக ஜெயிக்க வைப்பதும் தமிழ் சினிமாவில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆஹா ஓஹோ என புகழப்படும் சில படங்களை தியேட்டர்களில் சென்று பார்த்தால் பணமும் விரயம் நேரமும் விரயம் என்ற கசப்பான உண்மை வெளிப்பட்டு விடுகிறது.

- Advertisement -

அப்படியும் ஒருபுறம் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். மொக்கையான படங்களை கூட அதிக வசூல் ரசிகர்களின் அமோக ஆதரவு என்று சொல்லி ஏமாற்றும் ஒரு யுக்தியும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் நல்ல படங்களும் வரவே செய்கின்றன.

அந்த வரிசையில் சிறை மற்றும் தாய்கிழவி படங்களுக்கு பிறகு இப்போது திரையரங்குகளில் ஓடும் யூத் படமும் நல்ல படமாக ரசிகர்களால் உண்மையாக கொண்டாடப்படுகிறது. பள்ளி பருவ வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களத்தில் படத்தை உருவாக்கிய இளம் நடிகர் கென் கருணாஸ் ஹீரோவாக டைரக்டராக இந்த படத்தில் பாஸ் மார்க் வாங்கி ஜெயித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த 19ம் தேதி யூத் படம் ரிலீஸான நிலையில் இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. வழக்கமாக பள்ளி கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்திய படங்கள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைக்கிறது. அந்த வரிசையில் அழகி பள்ளிக்கூடம் ஆட்டோகிராப் பட வரிசையில் இப்போது யூத் படமும் பெரிய வரவேற்பை வெற்றியை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி 436 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன யூத் படம் ரிலீஸ் நாளில் மொத்தம் 5 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்த நாளில் 6 கோடி ரூபாய் வரை வசூலித்தது. 3வது நாளில் 8 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில் 3 நாட்களில் இந்த படம் மொத்தம் 19 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 5 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்