- Advertisement -
Homeபொழுதுபோக்குகென் கருணாஸ் நடித்து இயக்கிய யூத் படம் இதுவரை மொத்த வசூல் எவ்வளவு? - ஓடிடி...

கென் கருணாஸ் நடித்து இயக்கிய யூத் படம் இதுவரை மொத்த வசூல் எவ்வளவு? – ஓடிடி ரிலீஸ் தேதியும் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் கருணாஸ். இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக அறிமுகமான நடிகர் கருணாஸ் பிறகு பல படங்களில் காமெடி ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். இப்போது முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் கட்சி தலைவராக உள்ள கருணாஸ் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக வருகிற தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் யூத் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். ஏற்கனவே அசுரன் விடுதலை 2 வாத்தி போன்ற படங்களில் நடித்த கென் கருணாஸ் இயக்குனர் வெற்றிமாறனின் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்த யூத் படம் வெளியானது. பள்ளி வாழ்க்கையை மையக்கதையில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே ரூ. 5 கோடி வரை மிகப்பெரிய வசூலை குவித்தது.

எப்போதுமே நல்ல திரைக்கதை அம்சத்தில் உருவான படங்களுக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவை தருகின்றனர். அந்த வகையில் சிறை தாய்கிழவி படங்களை தொடர்ந்து யூத் படத்துக்கும் அமோகமான ஆதரவு ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது. இப்போது துரந்தர் 2 படம் ரிலீஸான போதிலும் யூத் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.

இந்நிலையில் கடந்த 8 நாட்களில் யூத் படம் மொத்த வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த படம் உலகளவில் 38 கோடி ரூபாய், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 28 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் யூத் படம் வெளியாகிறது என்கிற லேட்டஸ்ட் தகவலும் கிடைத்துள்ளது.

சற்று முன்