- Advertisement -
Homeபொழுதுபோக்குகண் திறக்கும் நீதி தேவதையாக நயன்தாரா... முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்... படம் பேருதான் இருக்கிறதிலேயே...

கண் திறக்கும் நீதி தேவதையாக நயன்தாரா… முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்… படம் பேருதான் இருக்கிறதிலேயே ஹைலைட்…

- Advertisement -

ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. நடிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து சந்திரமுகியில் கலக்கினார். இதன் மூலம் முன்னணி நடிகைகள் பட்டியலில் சேர்ந்த அவர், அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னேறினார்.

நடிகையின் முயற்சி, அவருக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அந்த நேரத்தில் வல்லவன் படத்தில் நடித்த நயன்தாரா, சிம்புவுடன் நெருக்கமாக இருந்ததால் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்ட நிலையில் திடீரென பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்த அவர் சர்ச்சைக்குள்ளான நடிகை என பெயர் பெற்றார். இதையடுத்து தமிழ் சினிமாவில் சிறிது காலம் ஒதுங்கி இருந்த அவர், ராஜா ராணி திரைப்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆக அமைய, ராஜா ராணியை பார்ப்பதற்கு என்றே நயன்தாரா ரசிகர்கள் திரையரங்குகளில் முண்டியடித்தனர்.

இதன் பிறகு வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் நயன்தாராவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. காதம்பரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர் தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்னும் இருக்கையை தக்க வைத்துக் கொண்டார். அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா பின்னாளில் அவரே திருமணம் செய்து கொண்டார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே பார்த்து பார்த்து தேர்வு செய்த நயன்தாரா, சோலோவாக வந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக அவதாரம் எடுத்தார். கோலமாவு கோகிலா, மாயா, அறம் போன்ற திரைப்படங்கள் நயன்தாராவின் நடிப்புக்கு தீனி போடுவதாய் அமைந்ததுடன், அவரது செல்வாக்கையும் உயர்த்தியது. இதன் நடுவே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தாலும், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேடி உள்ள கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரின்ஸ் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை டியூட் விக்கி எனும் இளம் இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்திற்கு மண்ணாங்கட்டி என்ன டைட்டில் வைக்கப்பட்டு ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றி 500, 2000 ரூபாய் நோட்டுகள் ராக்கெட் வடிவில் வைக்கப்பட்டு இருக்க, நடுவே செல்லாக்காசுகள் இருப்பது போல இதன் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1960களை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த ஆண்டு திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்