- Advertisement -
Homeபொழுதுபோக்குலஞ்சம் ஊழலுக்கு எதிரான இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, திடீரென அரசியல்வாதியாக பேசிய...

லஞ்சம் ஊழலுக்கு எதிரான இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, திடீரென அரசியல்வாதியாக பேசிய நடிகர் கமல்ஹாசன் – இந்தியன் தாத்தாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்த படம் இந்தியன். மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்ற படமாக அமைந்தது. இதில் சுதந்திர போராட்ட வீரராக, சேனாபதி கேரக்டரில் நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.

அதன் 2வது பாகமாக, மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் கருப்பு நிற பேஷன் டிரஸ்சில், தொப்பி அணிந்தபடி மாஸ் கெட்டப்பில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படம், லஞ்சம் ஊழலுக்கு எதிரான படம். ஆங்கிலேயரிடம் இருந்து போராடி இந்தியா விடுதலை பெற்ற நிலையில், அரசு அதிகாரிகளின் லஞ்சம், ஊழல் பிடியில் மீண்டும் நாடு அடிமையாகி விட்டதே, என்பதை தன் மகள் கஸ்தூரி மரணம் மூலம் புரிந்துக்கொள்ளும் கமல், இந்தியன் தாத்தாவாக மாறி, களையெடுப்பதுதான் இந்தியன் படத்தின் கதை.

இப்போது இந்தியன் 2 ஆக வெளியாகும் படமும் லஞ்சம், ஊழலுக்கு எதிரான ஒரு மையக் கருத்தை தான் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் லஞ்சம், ஊழல், அநீதிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார் நடிகர் சித்தார்த். அவருக்கு அதனால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்ற, இந்தியன் தாத்தா களத்தில் இறங்குவதுதான் இந்த படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், இந்தியன் 2 படம் சிக்கலில் மாட்டிக் கொண்டு 2, 3 ஆண்டுகளாக தொடர்ந்து நகர முடியாமல் இருந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியதால் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு, மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அந்த பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தது போல, அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டிய சூழல் வரும், என்று நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். லஞ்சம் ஊழலுக்கு எதிரான படத்தின் இசை வெளியீட்டு விழாவில், திமுக அமைச்சர் உதயநிதியை பாராட்டி பேசிய மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர், அரசியல்வாதி கமலை, இந்தியன் தாத்தா இப்படி பேசலாமா, என நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்