- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடி செலவா? பாலிவுட்டிலும் தன் கைவரிசையை காட்டிய அட்லீ, பாவம் தயாரிப்பாளர்

ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடி செலவா? பாலிவுட்டிலும் தன் கைவரிசையை காட்டிய அட்லீ, பாவம் தயாரிப்பாளர்

- Advertisement -

தமிழில் “ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய வெற்றித் திரைப்படங்களை கொடுத்த அட்லீ, பாலிவுட்டில் இயக்கியுள்ள திரைப்படம் “ஜவான்”. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஷாருக்கான் மனைவி கௌரி கான் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

அட்லீ, நயன்தாரா, அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் அறிமுகமாகும் திரைப்படமாக “ஜவான்” அமைந்திருக்கிறது. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க ஒரு பக்காவான ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி வருவதாக அந்த டீசரை பார்க்கும்போது தெரிய வருகிறது.

- Advertisement -

எப்போதும் அட்லீ திரைப்படங்கள் ஆக்சன், சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் என்று மிகவும் கலவையாகவே இருக்கும். ஆனால் “ஜவான்” திரைப்படத்தின் டீசரை பார்க்கும்போது இத்திரைப்படம் அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாகவே உருவாகியுள்ளதாக தெரிகிறது. ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர். அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஸ்டன்ட் காட்சிகள் பயங்கரமாக இருக்கும் என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

இந்த நிலையில் “ஜவான்” திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்குவதற்காக மட்டுமே பல கோடிகள் செலவு வைத்துள்ளார் அட்லீ. அதாவது கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட பெண் டான்சர்களை கொண்ட ஒரு கலர்ஃபுல்லான பாடலை ரூ.15 கோடி செலவில் படமாக்கியுள்ளாராம் அட்லீ. “ஒரு பாட்டுக்கே இவ்வளவு கோடியா?” என்று சினிமா வட்டாரங்கள் வாயை பிளக்கின்றனர்.

- Advertisement -

“அட்லீ சொன்ன பட்ஜெட்டிற்குள் படம் எடுத்து முடிக்க மாட்டார், படம் முடியும்போது பட்ஜெட்டை எங்கோ கொண்டுபோய்விடுவார்” என்று அவர் மீது பல விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது “ஜவான்” படத்தில் ஒரு பாடலுக்கே 15 கோடி செலவு வைத்துவிட்டார் என்று தகவல் வருகிறது.

- Advertisement -

சற்று முன்