- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு பதிலாக இந்த ஹீரோ நடிக்கப் போறாரா?...

ஜெயிலர் 2 படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு பதிலாக இந்த ஹீரோ நடிக்கப் போறாரா? – அப்ப படம் வேற லெவலா இருக்குமே…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துக்கு பாட்ஷா படம் போல ஒரு சூப்பர் கம்பேக் கொடுத்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 500 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூல் சாதனையும் புரிந்தது.

இதையடுத்து ஜெயிலர் 2ம் பாகம் உருவாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முடிவு செய்தார். இதுகுறித்து டைரக்டர் நெல்சன் திலீப்குமாருக்கு அறிவுறுத்தினார். அதேபோல் நடிகர் ரஜினியிடமும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க கோரிக்கை விடுத்தார். ஜெயிலர் படத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை அடுத்து அதன் 2ம் பாகம் உருவாக வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.

- Advertisement -

ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை தனது படத்தின் 2வது பாகத்தில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த், முதன்முறையாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதித்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. அதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆகவே ஜெயிலர் 2 படத்திலும் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த 2ம் பாகத்தில் அவர்களது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதைக்களத்தை நெல்சன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

ஆனால் சில வாரங்களுக்கு முன் கன்னட நடிகர் சிவராஜ் குமார் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் இப்போது பூரண குணமடைந்து வருகிறார். மருத்துவர் ஆலோசனைப்படி முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் இந்தியா திரும்பியதும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் பல மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணாவை ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இவர் ஓடுகிற டிரெயினை ஒற்றை விரலால் தடுத்து நிறுத்துவது, லாரியை சுண்டு விரலால் தட்டிவிட்டு பறக்க விடுவது என்று அட்ராசிட்டி செய்பவர். ரஜினி படத்தில் இவரை எப்படி காட்ட போகிறார்கள் என்று ரசிகர்கள் இப்போது எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்