- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பரான மெலோடி பாட்டு கேக்கணுமா? தக்லைஃப் படத்தில் இருந்து செகண்ட் சிங்கிளாக வரப்போகுது - எப்போ...

சூப்பரான மெலோடி பாட்டு கேக்கணுமா? தக்லைஃப் படத்தில் இருந்து செகண்ட் சிங்கிளாக வரப்போகுது – எப்போ தெரியுமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இருவரும் 36 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த படம் தக்லைஃப். கடந்த 1987ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் நாயகன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வேலுநாயக்கர் கேரக்டரில் நடித்த கமலுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.

அதற்கு பின் இருவரும் இணைந்து நிறைய படங்கள் தருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் 36 ஆண்டுகளாக நடக்கவே இல்லை. இதற்கும் கமலும் மணிரத்னமும் நெருங்கிய உறவினர்கள். கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் சுஹாசினியை தான் மணிரத்னம் திருமணம் செய்திருக்கிறார். மணிரத்னம் கமலுக்கு மருமகன், கமல் மணிரத்னத்துக்கு சின்ன மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனினும் 36 ஆண்டுகள் இணையாத இந்த 2 இமயங்களும் இப்போது மீண்டும் இணைந்திருக்கின்றன. அதனால் தக்லைஃப் படம் குறித்த எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. ஏனெனில் மணிரத்னம் படம் என்றாலே இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சிம்பு திரிஷா அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் அபிராமி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருப்பதும் படம் குறித்த ஆவலை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது. இன்னும் 40 நாட்களில் இந்த படம் திரைக்கு வருகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே குத்து பாடல்களும், அயிட்டம் பாடல்களும் பெரிய அளவில் ரீச் ஆகின்றன. ஆனால் மனதுக்கு இதம் தரும் மெலோடி பாடல்கள் என்பது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இல்லாதது மெலோடி பாட்டு பிரியர்களை பலத்த அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. அவர்களுக்கான ஒரு சந்தோஷம் விரைவில் வர உள்ளது.

அதாவது தக்லைஃப் படத்தில் ஒரு சூப்பரான மெலோடி பாட்டை ஏஆர் ரகுமான் தந்திருக்கிறார். வருகிற மே 7ம் தேதி இந்த செகன்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இது ரசிகர்களின் மனதை இதமாக்கி உற்சாகப்படுத்தும் ஒரு சிறந்த பாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மே 16ம் தேதி நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் தக்லைஃப் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மே 7ம் தேதி இந்த செகன்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்