- Advertisement -
மைசா படம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எனக்கு ரொம்பவும் உயரம் என்றாலும் பாம்புகள் என்றாலும் ரொம்பவும் பயம். இருந்தாலும் மைசா படத்துக்காக 90 அடி உயரத்தில் இருந்து குதிக்க தயாரானேன். சேஃப்டிக்கு உடலில் வயர்கள் இணைக்கப்பட்ட போது மேலும் பதட்டமாக இருந்தது. அப்போது இதுதான் என் வாழ்க்கையின் கடைசி நாள் என்று நினைத்தேன். உயரத்தில் இருந்து குதித்த போது எல்லாமே ஸ்லோமோஷனில் நடப்பது போல இருந்தது. பாதுகாப்பாக வந்து தரை இறங்கிய பிறகும் பயத்தில் நடுங்கியபடியே கண்ணீர் விட்டு அழுதேன் என்று அவர் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





