நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் உருவான இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜீத்குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை பார்த்து பார்த்து தரமான சம்பவமாக படத்தை டைரக்ட் செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் வெளியான அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ் ஹிட் கொடுத்த பழைய படங்களின் கெட்டப்பில் இதில் அஜீத்குமார் வருவது போன்ற காட்சிகளில் ஏகே ரசிகர்கள் ஏகப்பட்ட சந்தோஷத்தில் படத்தை காண தயாராகி வருகின்றனர்.
குட் பேட் அக்லி படத்தில் இருந்து ஏற்கனவே ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்த சூழலில் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் அனிருத் பாடிய காட் பிளஸ் யூ மாமே என்ற பாடல் 30ம் தேதி வெளியாகும் என 29ம் தேதி நேற்று மாலை பிரமோ வெளியானது. இது அஜீத்குமார் ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து குட் பேட் அக்லி படத்தில் இருந்து செகன்ட் சிங்கிள் பாடலாக காட் பிளஸ் யூ மாமே என்ற பாடல் ரிலீஸாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீவி பிரகாஷ்குமார் இசையில் அனிருத் பாடிய இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் கோடியோகிராபில் நடிகர் அஜீத்குமார் சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார்.
ஜெயிலில் 63 எண் கைதி ஆடையில் நடிகர் அஜீத்குமார் கூலிங்கிளாஸ் அணிந்த படி இந்த பாடலுக்கு மாஸ் டான்ஸ் ஆடியிருக்கிறார். மேலும் பாடல் காட்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில வீடியோ கிளிப்ஸ்களும் இந்த பாடல் காட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த பாடல் அஜீத்குமார் ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.





