ஏற்கனவே விஜய் கட்சியை நம்பி விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போட்ட மக்கள் 4 மாதங்களில் கண்ணீர் விடாத குறையாக புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே பெயர் மாற்றம் செய்து தவெக அரசு செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது.
இதில் புதிய திட்டங்கள் என்றால் எம்எல்ஏக்களுக்கு இலவச கார், மாதம் ரூ. 75 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை பட்டிணப்பாக்கத்தில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமை செயலகம் லண்டனுக்கு கார் ரேஸ் பார்க்க சென்ற இன்ப சுற்றுலா போன்றவை தான் விஜய் அரசு செயல்படுத்தியாக உள்ளது.
இதற்கிடையே விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். ஒருபுறம் மின்கட்டண உயர்வும் மக்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏக்களை அதிமுக முன்னாள் அமைச்சர்களை மாவட்ட செயலாளர்களை விலைக்கு வாங்கும் செயலில் தவெக முழு தீவிரம் காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக கூட்டத்துக்கு வந்தாலும் சட்டசபைக்கு வந்தாலும் திமுக திமுக என்று புராணம் பாடுவதையே விஜய் வழக்கமாக கொண்டிருப்பது மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. திமுக சரியில்லை என்றால் உங்கள் கையில் உள்ள ஆட்சி நிர்வாகத்தை சரியாக நடத்தாமல் மறுபடி மறுபடி திமுக மீதே பழியை போடுவதே ஏன் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தவெக தரப்பில் இதற்கு பதிலே இல்லை.
இதற்கிடையே விஜயை தொடர்ந்து நடிகர்கள் தனுஷ் சிவகார்த்திகேயன் சிம்பு சூர்யா விஜய் சேதுபதி என 5 ஹீரோக்கள் அரசியல் களத்துக்கு வர தயாராக உள்ளனர். இதில் தனுஷ் ஏற்கனவே கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விட்டார். சிவகார்த்திகேயன் 2000 பேர் பங்கேற்ற நற்பணி இயக்க கூட்டத்தில் பிற்காலத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு என்று அந்த கூட்டத்தில் சூசகமாக பேசியிருக்கிறார்.
நடிகர் சூர்யாவும் ரசிகர் மன்றங்களை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறார். நடிகர் சிம்பு, எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்கிறார். மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியும் மாவட்டம் வாரியாக ரசிகர் மன்றங்களை பலப்படுத்த துவங்கியிருக்கிறார். ஆக விஜயை தொடர்ந்து இந்த 5 நட்சத்திர ஹீரோக்களும் அரசியல் களத்தில் குதிக்க இப்போதே ஆயத்தமாகி வருகின்றனர்.





