- Advertisement -
Homeபொழுதுபோக்குசபரிமலைக்கு மாலை போட்டு தப்பித்துக்கொண்ட படத்தின் ஹீரோ, டைரக்டர் செல்வராகவன் பெண்டை கழட்டுவதாக எழுந்த புகார்...

சபரிமலைக்கு மாலை போட்டு தப்பித்துக்கொண்ட படத்தின் ஹீரோ, டைரக்டர் செல்வராகவன் பெண்டை கழட்டுவதாக எழுந்த புகார் – அட கம்பேக் தருவதை மறந்துட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு படைப்பாளியாக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நாயகனாக நடித்தார். இந்த படத்தை டைரக்ட் செய்து இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செல்வராகவன். இவரது தந்தை கஸ்தூரி ராஜாவும் பல வெற்றிப் படங்களை தந்தவர்.

செல்வராகவன் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு சிறந்த படங்களை கொடுத்தார். குறிப்பாக மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, நானே வருவேன், இரண்டாம் உலகம் போன்ற படங்களை தந்தார். இதில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் 2ம் பாகங்களை வெப் தொடர்களாக தரவும் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

துவக்கத்தில் இயக்குனராக இருந்த செல்வராகவன் இப்போது முக்கிய நடிகராகவும் தமிழ் சினிமாவில் மாறியிருக்கிறார். பீஸ்ட், மார்க் ஆண்டனி, பகாசுரன், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்த செல்வராகவன், வருகிற 29ம் தேதி வெளியாக உள்ள ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இதற்கிடையே ரவிகிருஷ்ணா நடிப்பில் மீண்டும் 7ஜி ரெயின்போ காலனி படத்தை 2ம் பாகமாக எடுத்து வருகிறார். ஆனால் இதில் முதல் பாகத்தில் நடித்த சோனியா அகர்வால் நடிக்கிறாரா என்பது உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ரவிகிருஷ்ணா மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார். சில மாதங்களாக படப்பிடிப்பு சென்னையில் பல பகுதிகளில் நடந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகன் ரவிகிருஷ்ணா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருப்பதால் அவர் மலைக்கு சென்று திரும்பிய பிறகே இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரவி கிருஷ்ணா இப்போது நிம்மதியாக இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஏனெனில் 7ஜி ரெயின்போ காலனிக்கு பிறகு ரவிகிருஷ்ணா சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் சரியாக போகாததால் அவர் மீண்டும் படங்களில் நடிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஷூட்டிங்கில் செல்வராகவன் அவரது வழக்கமான ஸ்டைலில் நாயகனை பெண்டு கழட்டியிருக்கிறார். நடிப்பில் இருந்து நீண்டகாலம் விலகி இருந்ததால், ரவிகிருஷ்ணா மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சிகளில் நடிக்கிறார். அதே நேரத்தில் இந்த படம் ரவிகிருஷ்ணாவுக்கு கம்பேக் படமாக அமையும். அதனால் சிரமத்தை பார்க்காமல் நடித்தால் அடுத்த சுற்று வரலாம் என்கின்றனர், ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்