- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த உணர்ச்சிப் பூர்வமான தருணம்... கண்கலங்கியபடி வாழ்த்து தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்......

ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த உணர்ச்சிப் பூர்வமான தருணம்… கண்கலங்கியபடி வாழ்த்து தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்… அப்போ உண்மையிலேயே எல்லாம் முடிஞ்சு போச்சா…

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றும், இதற்காகதான் திரைத்துறையில் இருந்து விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பிறகு, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் விஜய் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, திரைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு ரிலீஸ் செய்யப்பட்ட படம் என்பதால் அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதனை பூர்த்தி செய்ய வெங்கட் பிரபு தவறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

வழக்கமான தந்தை மகன் சண்டை போன்று அந்த திரைப்படம் இறுதியில் ஆகிவிட்டதும், தேவையே இல்லாமல் மகன் விஜய் அவ்வளவு தூரம் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்ததும் படத்தை சுவாரஸ்யம் இல்லாமல் ஆக்கிவிட்டது. இருப்பினும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

இப்படியான சூழலில் தனது கடைசி திரைப்படத்திற்கு இயக்குனராக எச் வினோத்தை தேர்வு செய்தார் விஜய். கே வி என் நிறுவனம் இதனை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ஜனநாயகன் என தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், அதில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் மேனன், மமீதா பைஜு, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல், இதிலும் விஜய்க்கு வில்லனாக வருகிறார்.

படத்தில் விஜய்க்கு அம்மாவாக ரேவதி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் வினோத். குறிப்பாக சென்னையில் உள்ள பையனூர் படப்பிடிப்பு தளத்தில்தான் இதன் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகளை எடுப்பதற்காக மட்டும் படக்குழுவினர் கொடைக்கானல் சென்றனர்.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தை நேற்று விஜய் முடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது படப்பிடிப்பு தளமே கனத்த இதயத்துடன், விஜய்க்கு பிரியா விடை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைத் துறையில் இருந்து முழுவதுமாக விடை பெற்று இருக்கும் விஜய், அடுத்து முழு நேர அரசியல் மட்டுமே ஈடுபட இருப்பதால் அவருக்கு நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்