- Advertisement -
Homeபொழுதுபோக்குஇணையத்தில் வெளியான ஜனநாயகன் படம் - இதுவரை 3 முக்கிய குற்றவாளிகள் உட்பட 9 பேர்...

இணையத்தில் வெளியான ஜனநாயகன் படம் – இதுவரை 3 முக்கிய குற்றவாளிகள் உட்பட 9 பேர் கைது – கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையால் இந்த படம் அந்த தேதியில் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது. இன்னும் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இன்னும் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -

இந்த நிலையில் மேலும் இப்போது 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 3 பேரும் தான் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கான விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் என்றும் கூறப்படுகின்றனர். அதில் ஒருவர் வேறு ஒரு படத்தில் உதவி இயக்குனராக இருப்பவர் என்றும் தெரிய வந்துள்ளது.

அவர் எடிட்டிங் ஸ்டுடியோவில் நுழைந்து ஜனநாயகன் படத்தை திருடியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜனநாயகன் படம் லீக் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் பெயர் புகைப்படம் உள்ளிட்ட எந்த விவரங்களையும் இப்போதைக்கு வெளியிட முடியாது என்று சைபர் கிரைப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படத்தை இணையதளங்களில் வெளியிடவும் கேபிள் டிவியில் வெளியிடவும் தடை விதிக்க கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த படம் சென்சார் வழங்கும் முன்பே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களிலோ கேபிள் டிவிகளிலோ வெளியிட்டால் அது படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஜனநாயகன் படத்தை இணையதளங்களிலும் கேபிள் டிவிகளிலும் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூன் 2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்