- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள நடிகர் பகத் பாசிலுடன் கைகோர்க்கும் 96 பட இயக்குனர்... அதுவும் எந்த ஜானரில் எடுக்கப்...

மலையாள நடிகர் பகத் பாசிலுடன் கைகோர்க்கும் 96 பட இயக்குனர்… அதுவும் எந்த ஜானரில் எடுக்கப் போகிறார் தெரியுமா… போடு! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

- Advertisement -

96 மற்றும் மெய்யழகன் என்னும் இரண்டு தரமான திரைப்படங்களை கொடுத்தவர் பிரேம்குமார். தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தனது முதல் திரைப்படமான 96இல், தனது இயக்கத்தின் திறமையை அவர் நிரூபித்து விட்டார். தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் காதல் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அதில் நிச்சயம் 96க்கு என்று ஒரு நீங்காத இடம் கிடைக்கும்.

அந்த அளவுக்கு அந்தப் படத்தின் திரைக்கதை மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து ரசிகர்களை கலங்கடிக்க வைத்திருப்பார்கள். இதனைத் தொடர்ந்து பிரேம்குமார் அடுத்ததாக மெய்யழகன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

தனது முந்தைய திரைப்படத்தில், காதலை மையப்படுத்தி கதை எழுதிய பிரேம்குமார் இந்த முறை உறவுகளின் உன்னதத்தை மிக அழகாக காட்டியிருந்தார். கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இந்த திரைப்படத்தில் போட்டி போட்டு நடித்திருந்தார்கள். தஞ்சை மண்ணின் அழகிய வாழ்வியலை, அவ்வளவு நேர்த்தியாக படம் பிடித்திருந்தார் பிரேம்குமார்.

இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் விக்ரமுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆக்சன் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனால் சீயான் ரசிகர்கள் குதூகலித்திருந்த சூழலில் திடீரென அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படம் குறித்து, பிரேம்குமார் மனம் திறந்திருக்கிறார். அதில், நான் அடுத்ததாக மலையாள நடிகர் பகத் பாசிலுடன் இணைகிறேன். இது நேரடியாக தமிழில் இயக்கப்படுகிறது. ஆக்சன் திரில்லர் கலந்த படமாக இது இருக்கும். ஜனவரியில் இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக ஒரு அட்வெஞ்சர் திரைப்படத்தையும் எடுத்த திட்டமிட்டு இருக்கிறேன். இதில் கிட்டத்தட்ட 9 கதாபாத்திரங்கள் படம் முழுக்க வருவார்கள். ஒரு காதல் திரைப்படத்தை இயக்கவும் திட்டம் உள்ளது. கதாநாயகியே இல்லாமல் இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். விக்ரம் உடனான படத்தின் திரைக்கதை எழுத இன்னும் ஒரு நான்கு மாதங்கள் ஆகலாம். அதனால் அதை தள்ளிப் போயிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்