- Advertisement -
Homeபொழுதுபோக்கு50 வயது முதிய பெண்ணை சிக்கலில் இருந்து காப்பாற்றிய விஜய் சேதுபதி, வேற லெவல் பண்ணிட்டாரே

50 வயது முதிய பெண்ணை சிக்கலில் இருந்து காப்பாற்றிய விஜய் சேதுபதி, வேற லெவல் பண்ணிட்டாரே

- Advertisement -

விஜய் சேதுபதி தற்போது இந்தியாவின் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஹிந்தியில் “மும்பைக்கார்”, “மெர்ரி கிருஸ்துமஸ்”, “ஜவான்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி “காந்தி டாக்ஸ்” என்ற மௌன திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி ஆறுமுக குமார் என்ற இயக்குனரின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது.

- Advertisement -

மலேசியாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் விஜய் சேதுபதியை பார்ப்பதற்கு பல தமிழர்கள் கூட்டம் கூட்டமாக அனுதினமும் கூடுவது வழக்கம். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. அனுதினமும் தன்னை பார்க்க வரும் ரசிகர்களை விஜய் சேதுபதி படப்பிடிப்பின் இடைவேளையின்போது சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வாராம்.

அவ்வாறு ஒரு நாள் படப்பிடிப்பின் இடைவேளையில் ரசிகர்களை சந்தித்தபோது ஒரு 50 வயது முதிய பெண்மணி மிகவும் கவலையோடு நின்றுகொண்டிருப்பதை பார்த்தாராம். அவரிடம் “எதாவது பிரச்சனையா?” என கேட்டிருக்கிறார். அப்போது அந்த முதிய பெண்மணி தனது நிலையை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதாவது அந்த பெண்மணி தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு பல நாட்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக வந்திருந்தவராம். பேசிய ஊதியத்தை கூட கொடுக்காமல் அந்த பெண்மணியை வேலை வாங்கியிருக்கிறார்கள். ஆதலால் அந்த பெண்மணி அங்கிருந்து தப்பித்து ஓடி வேறு ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்தாராம். எனினும் அவரது விசா காலம் முடிந்துவிட்டதாம். ஆதலால் அவரால் இந்தியாவிற்கு வரமுடியாத சூழல் இருந்திருக்கிறது. விசா காலம் முடிந்த பிறகும் மலேசியாவில் இருந்தால் சிறையில் தள்ளிவிடுவார்களாம். அதுவும் அந்த பெண்மணியின் கையில் சுத்தமாக பணமே இல்லையாம்.

அந்த பெண்மணியின் பரிதாப நிலையை தெரிந்துகொண்ட விஜய் சேதுபதி, உடனே இந்திய தூதரகத்திடம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அந்த பெண்மணியை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தாராம். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்