- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் இந்த விழாவுக்கு நான் வர மறுத்தேன்… அப்புறம் ஏன் வந்தேன் தெரியுமா? - படைதலைவன்...

முதலில் இந்த விழாவுக்கு நான் வர மறுத்தேன்… அப்புறம் ஏன் வந்தேன் தெரியுமா? – படைதலைவன் பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் சசிக்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் கேப்டன் என அன்பாக அழைக்கப்பட்டவர். ரஜினி கமல் கூட விஜயகாந்த் பேச்சுக்கு கட்டுப்படும் அளவுக்கு ஆளுமை மிக்க ஒரு கலைஞர். நல்ல மனிதர். திறமையானவர். அதே நேரத்தில் விஜயகாந்திடம் எப்போதுமே அசாத்தியமான ஒரு துணிச்சலை காண முடியும். பலரும் அதை பார்த்து வியந்திருக்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இருந்த கடனை அடைக்க விஜயகாந்த் துணிச்சலாக எடுத்த முடிவுதான் துபாய் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் நட்சத்திர கலை இரவு நடத்த வேண்டும் என்பது. அதுவரை அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசனை கூட பங்கேற்க வைத்தார் கேப்டன்.

- Advertisement -

கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன். இதில் விஜயபிரபாகரன் அரசியலில் ஆர்வமாக இருக்கிறார். இப்போது தேமுதிக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். அவரது தம்பி சண்முகபாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார். ஏற்கனவே மதுர வீரன் சகாப்தம் என 2 படங்களில் அவர் நடித்த நிலையில் இப்போது படை தலைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, படைதலைவன் இசை வெளியீடு நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் என்று படத்தோட டைரக்டர் அன்பு என்னை கூப்பிட்டார். நான் என்னுடைய ஆடியோ ரிலீஸ் தவிர வேறு எங்கேயும் போறதில்லப்பா என்று சொல்லிட்டேன்.

- Advertisement -

அவருக்கு எங்க அடிச்சா எங்க வலிக்குதுன்னு தெரிஞ்சிருக்கு போல. அடுத்தது சண்முக பாண்டியன் தம்பி கிட்ட இருந்து போன் வந்தது. அவர் சார் என்று சொன்னவுடனே நாளைக்குத்தானே வரேன், நான் வராமையா? கண்டிப்பா உன்னை வாழ்த்த வருவேன் என்று சொல்லிட்டேன்.

ஏனென்றால் விஜயகாந்த் சார் இருந்தா உரிமையா வாங்க என்று கேட்பார். சண்முக பாண்டியன் வாங்கன்னு கூட கேட்க கூடாது என்று நான் நினைத்தேன். அதனால்தான் அவர் கேட்கும் முன்பே நானே வரேன் என்று சொல்லிட்டேன் என்று நடிகர் சசிகுமார் அந்த விழாவில் ஓபனாக பேசியிருக்கிறார். வருகிற 23ம் தேதி படை தலைவன் படம் ரிலீஸாகிறது.

- Advertisement -

சற்று முன்