- Advertisement -
Homeபொழுதுபோக்குயார் கொடுத்த மொக்க ஐடியான்னு தெரியலை, கடைசியில அவரை இப்படி காமெடி பண்ண வெச்சுட்டாங்களேப்பா -...

யார் கொடுத்த மொக்க ஐடியான்னு தெரியலை, கடைசியில அவரை இப்படி காமெடி பண்ண வெச்சுட்டாங்களேப்பா – விஜய் பார்த்தாலும் கண்டிப்பா சிரிப்பாரு

- Advertisement -

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுளளன. குறிப்பாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பல பகுதிகளில் வீடுகள் மழைவெள்ளத்தால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன.

இந்த சூழலில் நடிகர் சூர்யா, கார்த்தி தரப்பில் மழைவெள்ள நிவாரணமாக ரூ. 10 லட்சம் முதல்கட்டமாக நிதி தந்துள்ளனர். பார்த்திபன், அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகின்றனர். கேபிஒய் பாலா, 200 பேருக்கு தலா 1000 ரூபாய் என ரூ. 2 லட்சம்நிதியுதவி செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே விஜய், அஜீத் ரசிகர்களும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகர மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் செய்கிற உதவியை காட்டிலும் அதை விளம்பரப்படுத்துவதில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்டுவதும்தான் அந்த உதவியை கொச்சைப்படுத்துவதாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது உதவி செய்பவர்கள் யார் என்பதை உதவி பெறுபவர்களும், மற்றவர்களும் தெரிந்துக்கொள்வது அவசியம்தான். அதற்கான விஜய் மக்கள் இயக்க கொடிகளை கைகளில் ஏந்தி உயர்த்தி பிடிப்பதும், விஜய் புகைப்படங்களை முன்னால் காட்டுவதும், விஜய் பதாகைகளை தாங்கிகொண்டு நிற்பதும் மிகையாக உள்ளது. இதற்கு மிக எளிதாக விஜய் புகைப்படம் உள்ள பனியனை அணிந்துக்கொள்ளலாம்.

- Advertisement -

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்லி ஆனந்த் செய்த ஒரு விஷயம், அந்த வீடியோவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஓரிடத்தில் குப்பை தொட்டி அருகே குப்பை குவிந்திருக்கிறது. அந்த குப்பையை கீழே இருந்து வாரி எடுத்து, மீண்டும் அதன் மேலேயே கொட்டுகிறார் புஸ்லி ஆனந்த்.அதாவது குப்பையை சுத்தம் செய்யாமல், குப்பையை எடுத்து, அதே குப்பையில் மீண்டும் போடுகிறார்.

மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது, குப்பை அகற்றுவது எல்லாம் பொதுநலத்தொண்டுதான். ஆனால், ஓரிடத்தில் இருக்கிற குப்பையை எடுத்து அதே இடத்தில் மீண்டும் போடுவது வெறும் வீடியோ காட்சிக்காக எடுக்கப்பட்டு, இப்படி ஒரு விளம்பரம் தேவையா என்ற விமர்சனத்தில் சிக்கியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால், புஸ்லி ஆனந்த் செய்யும் சமூக தொண்டை பார்த்து நடிகர் விஜயே விழுந்து விழுந்துதான் சிரிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

சற்று முன்