- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறனை தொடர்ந்து அந்த யூடியூப் பிரபலத்திற்கும் என்ஓசியை இலவசமாக வாரி வழங்கினாரா தனுஷ்... அப்போ அந்த...

வெற்றிமாறனை தொடர்ந்து அந்த யூடியூப் பிரபலத்திற்கும் என்ஓசியை இலவசமாக வாரி வழங்கினாரா தனுஷ்… அப்போ அந்த நடிகைக்கு மட்டும்தான் நோ சொல்லி இருக்காரா…

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டது பேசு பொருளானது. அந்த சமயத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தொடர்பான திருமண வீடியோ நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. அதில், நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இடம் பெற இருந்தன. அந்தத் திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

இதனால் காட்சிகளை பயன்படுத்த அவரிடம் என் ஓ சி சான்றிதழ் பெற வேண்டி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை தனுஷ் தரவில்லை என்றும், இதனால் தங்களால் netflix தளத்தில் படத்தை வெளியிட முடியவில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்திருந்தார் நயன்தாரா. அது மட்டுமல்ல, தனுஷ் அதற்கு பணம் கேட்பதாகவும் கூறி அவரை கடுமையாக சாடியிருந்தார்.

- Advertisement -

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தனுஷ் தயாரித்திருக்கும் அந்த திரைப்படத்தின் காட்சிகளை உபயோகப்படுத்த கூறுவது அவரது உரிமை. இதற்கு ஏன் நயன்தாரா பொங்குகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதேசமயம் தனுஷிற்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயத்தில் தனுஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, சிலம்பரசனை வைத்து வட சென்னை திரைப்பட உலகில் புதிய பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன். ஆனால் இதற்கும் என் ஒ சி தர தனுஷ் மறுத்துவிட்டதாக தகவல் பரவியது. வடசென்னை திரைப்படத்திற்கு அவரே தயாரிப்பாளர் என்பதால் வெற்றிமாறனிடம் அவர் நோ சொல்லி இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

- Advertisement -

உடனடியாக இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன், தனுஷ் இலவசமாக என் ஒ சி தர சம்மதம் தெரிவித்ததாகவும், அதை விட்டுவிட்டு பரவும் இந்த வதந்திகள் தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் கூறியிருந்தார். சிலம்பரசனை வைத்து எடுக்கப்பட இருக்கும் திரைப்படம், வடசென்னை உலகில் இருக்கும் என்றும், வடசென்னை கதாபாத்திரங்கள் அதில் நடிப்பார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதை அறிந்த தனுஷ் ரசிகர்கள், இணையத்தில் அவரைப் பாராட்டி பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது youtuber வி ஜே சித்து நடிக்கும் திரைப்படத்திற்கும், தனுஷ் இலவசமாக என் ஓ சி சான்றிதழை அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டயங்கரம் என்னும் திரைப்படத்தில் சித்து நடிக்கிறார். அதில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் பாடலை பயன்படுத்துவதற்குதான் தனுஷ் அனுமதித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு சித்து நடிக்கும் திரைப்படத்தையும், தனுஷ் அடுத்து போர் தொழில் இயக்குனர் உடன் கைகோர்த்திருக்கும் திரைப்படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்