- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் எல்சியுவை கொண்டு வந்தவர் லோகேஷ் கனகராஜ் அல்ல, இயக்குனர் இமயம் பாரதிராஜா தான்...

தமிழ் சினிமாவில் எல்சியுவை கொண்டு வந்தவர் லோகேஷ் கனகராஜ் அல்ல, இயக்குனர் இமயம் பாரதிராஜா தான் – அந்த பிசியு சீக்ரெட் உங்களுக்கு தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எல்சியு என்று சொல்லப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொண்டு வந்த யுக்தி என்று இன்றைய சினிமா ரசிகர்கள் கருதுகின்றனர். அதாவது அவர் இயக்கிய கைதி படத்தின் வரும் சில கேரக்டர்கள் விக்ரம் படத்தில் வரும். சில கேரக்டர் லியோ படத்தில் வரும். அதனால் அதை எல்சியு என்று பெருமிதமாக சொல்கின்றனர்.

ஆனால் இதை 1978ம் ஆண்டிலேயே தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. அதாவது 1977ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் வெளியானது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் சப்பாணியாக நடித்த படத்தின் நாயகன் கமல், பரட்டையன் கேரக்டரில் வில்லனாக நடித்த ரஜினியை கொலை செய்து விடுவார்.

- Advertisement -

சப்பாணியை கைது செய்த போலீசார் ஜெயிலுக்கு கொண்டு சென்று விடுவார்கள். அதன்பிறகு ரயில்வே ஸ்டேஷனில் மயிலு அதாவது படத்தின் நாயகி ஸ்ரீதேவி சப்பாணிக்காக காத்திருப்பது போல காட்சியை முடித்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா. சப்பாணி வருகைக்காக மயிலு காத்திருக்கிறாள் என்று அந்த காட்சியில் பாரதிராஜா பேசியிருப்பார்.

ஆனால் 16 வயதினிலே படத்தின் கதைப்படி சப்பாணி மீண்டும் வந்தானா, மயிலுடன் சேர்ந்து வாழ்ந்தானா என்பது ரசிக்ரகளுக்கு தெரியாது. இதற்கான ஒரு காட்சியை தனது அடுத்த படம் 1978ம் ஆண்டில் தனது இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தில் இயக்குனர் பாரதிராஜா சிம்பாலிக்காக கூறியிருப்பார்.

- Advertisement -

அந்த படத்தில் ஒரு காட்சியில் கிராமத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடக்கும். அப்போது மைக்கில் திருமணத்துக்கு மொய் செய்தவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும். அதில் பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி 5 ரூபாய் மொய் என்று சொல்வார்கள். அந்த காட்சியில் சப்பாணி ஜெயிலில் இருந்து திரும்பி வந்துவிட்டான்.

மயிலுவுடன் கணவனாக குடும்பம் நடத்துகிறான். அவர்கள் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். 5 ரூபாய் மொய் செய்யும் அளவுக்கு சப்பாணி மயில் இருவரும் சந்தோஷமாக வசதியாக வாழ்கிறார்கள் என்பதை இந்த ஒரு டயலாக் மூலமாக தனது முந்தைய படத்தின் கேரக்டர்களின் வாழ்க்கையை பதிவு செய்து ரசிகர்களுக்கு சொல்லியிருப்பார் பாரதிராஜா. இதுதான் உண்மையான பிசியு அதாவது பாரதிராஜா சினிமாடிக் யுனிவர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்