தமிழ் சினிமாவில் அறிமுகமான காலங்களிலேயே, ஆக்சன் படங்களில் நடித்து அதன் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர் விஷால். சண்டக்கோழி திமிரு உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு ஆக்சன் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று தந்தன. குறிப்பாக, இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குடும்பங்கள் தோறும் திரையரங்குகளில் படையெடுக்க வைத்தது அந்த திரைப்படம்.
இதன் பிறகு மீண்டும் ஹரியுடன் இணைந்து பூஜை திரைப்படத்தில் நடித்தார் விஷால். இந்தத் திரைப்படமும் முதலுக்கு மோசம் இல்லாமல் நல்ல வசூலை பெற்றது. ஆனால் அதன் பிறகு தான் விஷால் உடைய, திரையுலகப் பாதை சரிவை நோக்கிச் சென்றது. ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியாமல் திண்டாடி வந்தார் அந்த நடிகர்.
இடையில் பாண்டியநாடு, மருது, துப்பறிவாளன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டும், ஓரளவு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. ஆனால் அதன்பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. சில படங்கள் திரையரங்குகளில் வெளியானது கூட தெரியாமல் திரும்பிப் போனது.
ஆக்சன், எனிமி, அயோக்யா, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய திரைப்படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தன. தொடர் தோல்விகளால் விஷாலும், படங்களை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கினார். அவ்வளவுதான் விஷால் இனி திரை உலகத்தை விட்டு செல்ல வேண்டியது தான் என்று பலரும் கூறிவந்த சூழலில், ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அவர் நடித்தார்.
இந்த பெரிய அளவுக்கு எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பால் பிழைத்தது. கிட்டத்தட்ட எஸ் ஜே சூர்யாவை படத்தின் நாயகன் போல் செயல்பட்டதால் இந்த திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இவ்வளவு பெரிய வெற்றியை விஷாலை எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இப்படியான சூழலில் தனது ஆஸ்தான இயக்குனர் ஹரிவுடன் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார் விஷால்.
இந்த திரைப்படத்திற்கு ரத்னம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் தூக்கில், ஒருவரின் தலையை அறுத்து தனது கையோடு வைத்திருப்பது போல் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதைப் பார்த்து பலரும் கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். இப்படியான சூழலில் விஷால் படத்தில் சிங்கிள் ஷாட்டில் ஒரு சண்டைக்காட்சியை நடத்தி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், 20 வருஷமா இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே எனும் கூறும் டயலாக் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே வீரமே வாகை சூடும் படத்தில் அவர் சிங்கிள் சாட்டில் ஒரு சண்டைக் காட்சியை செய்திருந்தார். தற்போது ரத்னம் படத்திலும் அதை தொடர்ந்து இருக்கிறார்.





