- Advertisement -
Homeபொழுதுபோக்குகாரைக்குடியில் திடீரென பிரசார வேனில் இருந்து இறங்கிய நடிகர் விஜய் - அப்படி ஒரு மோசமான...

காரைக்குடியில் திடீரென பிரசார வேனில் இருந்து இறங்கிய நடிகர் விஜய் – அப்படி ஒரு மோசமான சம்பவத்தை யாருமே எதிர்பார்க்கலையே?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நடிகர் விஜயும் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பெரும்பாலான இடங்களில் அவருக்கு போலீஸ் அனுமதி கிடைப்பது இல்லை. அதனால் பல இடங்கள் திட்டமிட்டும் பிரசாரம் திடீர் திடீர் என ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் விஜய் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. ரோடு முழுக்க மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. விஜயின் பிரசார வேனை பலர் டூவீலர்களில் பின்தொடர்ந்து வருகின்றனர். விஜய் மீது உள்ள ஆர்வத்தால் வாகனங்களில் வரும் பலரும் விழுந்து அடிபடுகின்றனர்.

- Advertisement -

இந்த சம்பவங்கள் தொடர்வதால் நடிகர் விஜய்க்கு தேர்தல் பிரசாரம் பல இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. நிபந்தனைகள் என்ற பெயரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் விஜய்க்கு பிரசாரம் செய்யவே வாய்ப்பில்லாமல் போகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் நடிகர் விஜய் சமீபத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து பிரசார வேன் மூலம் நெல்லைக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது வழிநெடுக திரண்ட மக்கள் கூட்டத்தை பார்த்து எதிர்கட்சிகளே அரண்டு போய்விட்டன. இந்த படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்பது போல இருந்தது.

- Advertisement -

இன்று ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான நிலையில் அந்த பரபரப்பு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விஷால் சூர்யா சிவகார்த்திகேயன் போஸ் வெங்கட் ஜீவா தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலரும் பைரசிக்கு எதிராக தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காரைக்குடி சென்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார வேனில் மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். ஒரு கட்டத்தில் வேனை விட்டு இறங்கிய அவர், சைக்கிளில் சிறிது தூரம் செல்ல முயன்றார். ஆனால் திரண்டிருந்த கூட்டத்தில் சைக்கிளை ஓட்ட முடியாமல் சிரமப்பட்டார். அப்போது கூட்டம் நெருக்கியடித்ததால் விஜய் தடுமாறி கீழே விழப் போனார். அப்போது பவுன்சர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர். பிறகு மீண்டும் வேனில் ஏறி நடிகர் விஜய் பிரசாரத்தை தொடர்ந்தார்.

- Advertisement -

சற்று முன்