- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் மிஷ்கின் அந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என்பது எனக்கு முதலிலேயே தெரியும் - மேடையில் உண்மையை...

டைரக்டர் மிஷ்கின் அந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என்பது எனக்கு முதலிலேயே தெரியும் – மேடையில் உண்மையை போட்டுடைத்த நடிகை பூர்ணா

- Advertisement -

நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு, சவரக்கத்தி, கந்தக்கோட்டை, தலைவி, ஆடுபுலி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நல்ல நடிகையாக ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

வேலுார் மாவட்டம், வித்தகன், கொடைக்கானல், ஜன்னல் ஓரம், தகராறு, கொடி வீரன், காப்பான், அடங்க மறு என பல முக்கிய படங்களில் பூர்ணா நடித்திருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக இருக்கிறார். வித்யாசமான கேரக்டரில் நடிக்கும் வல்லமை கொண்டவர் என்ற பெயர் பூர்ணாவுக்கு உண்டு.

- Advertisement -

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் பூர்ணா நடித்திருக்கிறார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் மலையாளத்தில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் டெவில் என்ற படத்தில் நடித்திருக்கிறார். டெவில் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் நடிகை பூர்ணா. இந்நிலையில் டெவில் படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றார். அதில் நடிகர் விதார்த், டைரக்டர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டு பேசினர்.

- Advertisement -

அந்த விழாவில் நடிகை பூர்ணா பேசுகையில், டெவில் படத்தில் நடித்தது, என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயமாக மாறிவிட்டது. இந்த படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்களுக்கு நான் அடிமையாகி விட்டேன்.

டைரக்டர் மிஷ்கின் இசையில் நாட்டம் உள்ளவர். இசையில் புலமை மிக்க கெட்டிக்காரர் என்பது எனக்கு முதலிலேயே தெரியும். பின்னணி இசை, பாடல் இசை, பாடல் வரிகளில் உள்ள நுட்பம் என அவர் எல்லாவற்றையும் கவனித்து முடிவெடுப்பார். ஏனெனில் அவருக்கு நல்ல இசை அறிவு உண்டு. மிஷ்கின் இசையிலும் பெரிய அளவில் சாதிப்பார் என்று அந்நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா பேசினார்.

- Advertisement -

சற்று முன்