- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இப்படி வெறுப்பேற்றுகிறாரே? நடிகர் ரவி மோகன் மீது அதிருப்தியடைந்த ரசிகர்கள் - இது கொஞ்சம்...

மீண்டும் இப்படி வெறுப்பேற்றுகிறாரே? நடிகர் ரவி மோகன் மீது அதிருப்தியடைந்த ரசிகர்கள் – இது கொஞ்சம் ஓவரா போகுதே பாஸ்?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தமிழில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஜெயம் படத்தில் அறிமுகமான அவர் தனது பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படங்களே எதுவுமில்லை.

குறிப்பாக ஜெயம் ரவி நடித்த அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை என எந்த படமுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இப்போதும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் ஒருவேளை நல்ல வெற்றிப் படங்களாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கடந்தாண்டில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். ஜெயம் ரவி ஆர்த்திக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் 14 வயது மற்றும் 11 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்த சூழ் நிலையில் ஜெயம் ரவியின் இந்த பிரிவு அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது. இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என்றும் மாற்றிக்கொண்டார். சில தினங்களுக்கு முன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமண விழா நடந்தது. இதில் நடிகர் ரவி மோகன் தனது தோழியான பாடகி கெனிஷாவுடன் கலந்துக்கொண்டார். இருவரும் ஒரே மாதிரியான நிறத்தில் பட்டு ஆடையணிந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

- Advertisement -

அவர்களை பார்த்த பலரும் புதுமண தம்பதி போல இருக்கின்றனர் என்றே ஆச்சரியப்பட்டனர். இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. கெனிஷாவின் கையை பிடித்து ரவிமோகன் அழைத்துச் சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ஆவேசமாக ஒரு பதிவை செய்திருந்தார். ஒரு பொறுப்பான அப்பா செய்கிற வேலையா இது என்று கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் மீண்டும் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஐசரி கணேஷ் இல்லத் திருமண வரவேற்பு விழா, ரிஷப்சனுக்கும் தனது காதலி கெனிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்