நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் நேற்று, தியேட்டர்களில் வெளியானது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்துள்ள இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மதநல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட கதை இது.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் தம்பி ராமையா, செந்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணன், நிரோஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விளையாட்டில் மதத்தை கலக்காதீர்கள் என்ற கருத்தை முன்னிலைப்படுத்திய இந்த படத்தில், ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
ஏற்கனவே தனது கணவர் தனுஷ், கமல் மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோரை ஜோடியாக போட்டு, ஐஸ்வர்யர ரஜினிகாந்த் 3 என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாப் ஆனது. அடுத்து, கார்த்திக் கௌதம் நடித்த வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் சரியாக போகவில்லை.
இந்நிலையில் 3வது படமாக லால் சலாம் படத்தை அவர் டைரக்ட் செய்துள்ளார். ஏற்கனவே 2 படங்கள் இயக்கி மகள் ஐஸ்வர்யா தோல்வியை சந்தித்த நிலையில், 3வது படத்தில் அப்படி தோல்வி வரக்கூடாது என்பதால், தனது பங்களிப்பை கேமியோ ரோலில் ரஜினி தந்திருக்கிறார்.
லால் சலாம் படம் நேற்று ரிலீசான நிலையில், படம் பார்த்த ஒரு தரப்பினர் படம் சூப்பராக இருக்கிறது என்று பாசிட்டிவ் ரிவ்யூ தெரிவித்தனர். படம் நன்றாக உள்ளது. ரஜினி படம் பார்ப்பது போலவே உள்ளது. அவர் கேமியோ ரோலில் நடித்தது போலவே இல்லை. ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் என்று தெரிவித்திருந்தனர்,
லால் சலாம் படம் பார்க்க தியேட்டரில் ஆளில்லை. காலியான இருக்கைகளை ஒரு நாளிதழ் புகைப்படமாக வெளியிட்ட நிலையில், அந்த போட்டோவை எடுத்து பதிவிட்டுள்ள ப்ளு சட்டை மாறன், காளியோட ஆட்டம், காலியான கூட்டம் என கலாய்த்து பங்கம் செய்து, அந்த பதிவை அப்டேட் செய்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





