விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பெரிய அளவில் மக்களின் கவனம் பெற்றவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிகைளை நேர்காணல் செய்திருக்கிறார். அத்துடன் சினிமா விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா டிரெய்லர் வெளியீடு விழாக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்று வருகிறார்.
பொதுவாக டிடி திவ்யதர்ஷினி என்றாலே நடிகர் நடிகைகள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர்தான் நேர்காணல் செய்கிறார் என்றால் நயன்தாரா திரிஷா போன்ற நடிகைகள் உடனே ஓகே சொல்லி விடுவர். அதே போல் விழா மேடைகளில் டிடி மிக சிறப்பாக பேசி பார்வையாளர்களை கவர்ந்து விடுகிறார்.
இவர் பல படங்களில் சின்ன சின்ன கேர்டர்களில் சினிமாவில் நடித்திருக்கிறார். ஜூலி கணபதி சரோஜா காபி வித் காதல் சர்வம் தாளமயம் துருவ நட்சத்திரம் ஜருகண்டி முன்தினம் பார்த்தேனே என பல படங்களில் டிடி நடித்திருக்கிறார். இவரது அக்கா பிரியதர்ஷினியும் ஒரு நடிகைதான். சன் டிவியில் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தொகுப்பாளினி டிடி கூறிய போது, நான் ஒரு ஹீரோயினை பேட்டி எடுத்த போது அவரது உடையும் எனது உடையும் ஒரே மாதிரி இருந்தது. அதனால் என்னுடைய உடையை அவர் மாற்றிக் கொள்ளுமாறு கூறினார் என்ற தகவலை தெரிவித்து இருந்தார்.
அவர் அப்படி சொன்னதால், டிடியை உடை மாற்றச் சொன்ன நடிகை நயன்தாரா தான். அவரை தான் அடிக்கடி டிடி நேர்காணல் செய்வார் என்று இணையத்தில் வைரலானது. இதனால் நயன்தாராவை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இப்படி எல்லாம் கூட நயன்தாரா நடந்துக் கொள்ளலாமா என பலரும் திட்டினர்.
இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி டிடி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய உடையை மாற்ற சொன்ன நடிகை நயன்தாரா என்று பலரும் விமர்சிப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது. அது நடிகை நயன்தாரா இல்லை என்று விளக்கம் தந்திருக்கிறார். ஆனால் நயன்தாராவும் டிடியும் ஒரே மாதிரியான புடவை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது ஓ2 என்ற படத்திற்கான பிரமோ நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவை டிடி நேர்காணல் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





