- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் மைக் மோகன், அன்னதானம் வழங்கி நெகிழ்ச்சி -...

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் மைக் மோகன், அன்னதானம் வழங்கி நெகிழ்ச்சி – ஆனா கேப்டன் பத்தி கேட்டதுக்கு இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என்று கேட்டால் அப்போது நடிகர் ரஜினி பெயரையோ, கமல் பெயரையோ யாரும் சொல்ல மாட்டார்கள். மோகன் தான் அப்போது வெள்ளிவிழா நாயகன். இதயக்கோவில், மெல்லத் திறந்தது கதவு, மௌனராகம், நான் பாடும் பாடல் என மோகன்தான் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகனாக இருந்தார்.

ஆனால் ரஜினி, கமல் வருகைக்கு ஆக்‌ஷன் படங்கள் அதிகரித்தன ஹீரோயிசம் எதிர்பார்த்த தமிழ் சினிமாவில் மைக் பிடித்து பாடிய மோகனின் படங்கள் ஒருகட்டத்துக்கு பிறகு சரிவர எடுபடவில்லை. எனினும் மாற்றுக் கேரக்டர்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது, நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றதால், தமிழ் சினிமாவை விட்டே பல ஆண்டுகள் காணாமல் போனார் மோகன்.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் நடிகர் விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் இப்போது மைக் மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்காக, மைக் மோகன் இதுவரை அவர் வாங்காத சம்பளமாக ரூ. 2 கோடி பெறுவதாக கூறப்படுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி தரும் மோகன், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு உருவாகி உள்ளது.

தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் மறைந்த நிலையில், கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்துக்கு இன்று நடிகர் மைக் மோகன் வந்தார். அப்போது பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் அங்கிருந்தவர்களுக்கு பிரேமலதாவுடன் இணைந்து அன்னதானம் வழங்கினார்.

- Advertisement -

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மைக் மோகன் கூறுகையில், இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும் அங்கு எல்லாம் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். எனக்கு அவரிடம் ரொம்ப பிடித்ததே அவரது முரட்டு தைரியம்தான். சினிமாவில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் அவர் கேப்டனாக இருந்தார். விஜயகாந்த் நண்பராக இருந்ததில் பெருமைப்படுகிறேன். அவர் இறந்த பிறகும் தினமும் 1000 பேருக்கு அவரது பெயரில் அன்னதானம் வழங்குவது பெருமையான விஷயம் என்றார்.

அப்போது விஜயகாந்த் உடன் நடித்த அனுபவங்கள் பற்றி கேட்ட போது, அப்படி சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் சொல்ல மேடை இது கிடையாது. அதுபற்றி நான் தனியாக நான் பேசுகிறேன், என்றார். மீண்டும் நிருபர்கள் அதுபற்றி கேட்க பதிலளிக்க விருப்பமின்றி அங்கிருந்து கிளம்பிச் சென்றார் மைக் மோகன்.

- Advertisement -

சற்று முன்