- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் அந்த மாஸ் வில்லன், இதுவும் தளபதி ரூட்டுல ஒண்ணுதானே ப்ரோ? -...

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் அந்த மாஸ் வில்லன், இதுவும் தளபதி ரூட்டுல ஒண்ணுதானே ப்ரோ? – ஆனா இதுல கெத்து டைரக்டருக்குதான்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் துவக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, மனம் கொத்திப் பறவை, காக்கிச்சட்டை, வேலைக்காரன், எதிர்நீச்சல் போன்ற படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பு வேற லெவலில் ரசிகர்களை அசத்தியது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் கெத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. குறிப்பாக டான், ஹீரோ, மிஸ்டர் லோக்கல், மான் கராத்தே, பிரின்ஸ் போன்ற சில படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. இந்த படங்களில் சிவகார்த்தியேகன் நடிப்பு நன்றாக இருந்தாலும் கதை, திரைக்கதை சொதப்பியது. பலத்த ஏமாற்றத்தை தந்தது.

- Advertisement -

அதன்பிறகு டாக்டர், மாவீரன் ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன. அதிலும் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு, மிலிட்டரி டாக்டராக மிக பொருத்தமாக இருந்தது. மாவீரன் படத்திலும், மாறுபட்ட ஒரு நடிப்பை தந்து அசத்தியிருந்தார் சிவகார்த்திகேயன். இந்த 2 படங்களும் சிவகார்த்திகேயனுக்கு தெம்பு கொடுத்தது.

ஆனால் 6 ஆண்டுகளாக போராடி எடுக்கப்பட்ட அயலான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இன்று நேற்று நாளை டைரக்டர் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில், ஏலியன் நடித்திருந்தது. ஏலியனுக்கு சிவகார்த்திகேயன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

- Advertisement -

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள அமரன் படத்தை, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர். இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நடிகர் விஜய், சினிமாவை விட்டு இன்னும் ஒரு படத்துடன் விலக உள்ளதால், அடுத்த தளபதி சிவகார்த்திகேயன்தான் என, கோலிவுட் சினிமா வட்டாரத்தில் ஒரு பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. விஜய் இடத்தை பிடிக்க சில முன்னணி நடிகர்களுக்குள் கடும் போட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக, துப்பாக்கி பட வில்லன் வித்யுல் ஜம்வால் நடிக்க இருக்கிறார். அதாவது விஜய் பட வில்லனை, தனக்கு வில்லனாக்கி அதிலும் தளபதி ரூட்டில் சிவகார்த்திகேயன் செல்வதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்து, அந்த படம் படுதோல்வி அடைந்ததால் வித்யுல் ஜம்வால் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்திருக்கிறார். ஆனால் துப்பாக்கி படத்தில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தவர் ஏஆர் முருகதாஸ் என்பதால், அவர் மீதுள்ள நம்பிக்கையில் இந்த படத்தில் நடிக்கிறேன் என சம்மதித்து இருக்கிறார் வித்யுல் ஜம்வால்.

- Advertisement -

சற்று முன்