நடிகர் ரஜினிகாந்த், இப்போது 72 வயதிலும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். இப்போது தசெ ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடிக்கும் ரஜினி, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். ரஜினி இப்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 125 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் கமல் ரூ. 150 கோடி வாங்குகிறார்.
ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதில், அதாவது கருப்பு வெள்ளை படங்களில் ரஜினி, கமல் இருவருமே நடித்திருக்கின்றனர். ரஜினி அறிமுக நடிகர் என்பதால் கமலை விட அவரது சம்பளம் பலமடங்கு குறைவுதான். அப்போதுதான், தன்னுடன் நடித்த பிரபல நடிகையிடம் இப்படி மனம் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். அதை அவரே வௌிப்படையாக கூறியும் இருக்கிறார்.
நடிகை ஸ்ரீதேவி, சில ஆண்டுகளுக்கு முன், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இறந்து போனார், அவர் இறப்பதற்கு முன், விஜய் டிவியில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு அழைப்பாளராக பேசி, சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது, நடிகை ஸ்ரீதேவி கூறியதாவது, மூன்று முடிச்சு படத்தில் நான், கமல், ரஜினி மூன்று பேரும் நடித்தோம். அந்த படத்தில் நடிக்கும் போதே கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தார். நானும் அறிமுக நடிகைதான். ரஜினியும் அறிமுக நடிகர்தான்.
அந்த படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்டது. எனக்கு 5 ஆயிரம் ரூபாய், ரஜினிக்கு சம்பளம் 2 ஆயிரம் ரூபாய். அப்போது என்னிடம் பேசிக்கொண்டு இருந்த போது ரஜினி, கமலை போல நானும் ஹீரோவாகி இப்படி சம்பளம் வாங்குவேனா என ஆதங்கமாய் கேட்டார். நிச்சயம் நீங்க பெரிய நடிகராக வருவீங்க என்று நான் சொன்னேன்.
ரஜினி மிக இனிமையான மனிதர். நல்ல குணம் கொண்டவர் என்று பாராட்டி சொல்லி இருக்கிறார் ஸ்ரீதேவி. பிறகு பெரிய ஸ்டார் நடிகரான பின் ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி நான் அடிமை இல்லை, போக்கிரி ராஜா, பில்லா, ஜனனி, பிரியா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





