- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் யதார்த்தமா சொன்னதை அப்படியே அவர் படத்தில் காப்பியடிச்சு வச்சுட்டார் - நடிகர் பாண்டியராஜன் பற்றி...

நான் யதார்த்தமா சொன்னதை அப்படியே அவர் படத்தில் காப்பியடிச்சு வச்சுட்டார் – நடிகர் பாண்டியராஜன் பற்றி பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகர் பாண்டியராஜன். அவர் இயக்கிய ஆண்பாவம் படம் இன்று பார்த்தாலும் காட்சிக்கு காட்சி ரசித்து பார்க்கலாம். குறிப்பாக ஜனகராஜ் விகே ராமசாமி நடிப்பு வேற லெவலில் இருக்கும். கடந்த 1980 90களில் பாண்டியராஜன் இயக்கி அவரே நாயகனாக நடித்த பல படங்கள் முழுநீள நகைச்சுவை படங்களாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன. இப்போதும் பாண்டியராஜன் நடித்த அந்த படங்கள் அதிகளவில் ரசிக்க வைக்கின்றன.

குறிப்பாக ஆண்பாவம் நெத்தியடி பாட்டி சொல்லைத் தட்டாதே கதாநாயகன் மனைவி ரெடி கன்னிராசி டில்லிபாபு ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் பொங்கலோ பொங்கல் கோபாலா கோபாலா மனைவிக்கு மரியாதை என பல படங்கள் பாண்டியராஜின் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வெற்றிப் படங்களாக உள்ளன. இதில் சில படங்கள் அவரே இயக்கிய படங்களாகும்.

- Advertisement -

நடிகர் பாண்டியராஜன் ஆரம்பத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பல படங்களில் அவருடன் பணி செய்தவர். அதன்பிறகுதான் கன்னிராசி படத்தை டைரக்ட் செய்து இயக்குனரானார். ஆண்பாவம் படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை சீதா நாயகியாக அறிமுகம் ஆனார்.

ஆண்பாவம் படத்தில் ஒரு காட்சியில் காரில் வரும் ஒருவர், ரோட்டோர பாலம் சுவரில் அமர்ந்திருக்கும் பாண்டியராஜனிடம் பிரிட்ஜில் கார் முட்டுகிறதா என்று கேட்டு பின்னால் எடுக்க முட்டல வாங்க முட்டல வாங்க என்று சொல்வார். பிறகு கார் பிரிட்ஜ் சுவரில் மோதிவிட முட்டிடுச்சுங்க என்பார். இது ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு காமெடியாக இருந்தது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் கே பாக்யராஜ் பாண்டியராஜன் இருவரும் மேடையில் அருகருகே நின்று பேசினர். அப்போது இந்த காட்சி குறித்து இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, நான் ஒருமுறை பாண்டியராஜனிடம் ஒரு கதையை சொன்னேன். ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் புதிதாக கார் வாங்கியிருந்தார். அவரிடம் படிக்காத ஒரு பாமர வேலைக்காரன் இருந்தார்.

அவர் தனது காரை நிறுத்தும் போது பின்னால் சுவரில் இடித்து விடக்கூடாது என்பதற்காக நான் காரை எடுக்கிறேன் பின்னால் முட்டுதான்னு பார் என்று அந்த வேலைக்காரரிடம் சொல்வார். அவரும் பார்க்க முட்டுகிறதா முட்டுகிறதா என்று கேட்டபடி காரை பண்யைார் பின்னால் எடுக்க காரின் பின்பக்கம் சுவரில் மோதிவிடும். அப்போது அந்த வேலைக்காரன் முட்டிடுச்சுங்க என்பார். நான் சொன்னதை அப்படியே பாண்டியராஜன் ஆண்பாவம் படத்தில் வைத்து விட்டார் என்று கூறினார்.

- Advertisement -

சற்று முன்