- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தர் சி இப்படி செய்வதற்கு என் மகள்கள்தான் காரணம், அரண்மனை 4 நிகழ்ச்சியில் குஷ்பூ சொன்ன...

சுந்தர் சி இப்படி செய்வதற்கு என் மகள்கள்தான் காரணம், அரண்மனை 4 நிகழ்ச்சியில் குஷ்பூ சொன்ன ரகசியம் – இது உருட்டா, உண்மையா?

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் டைரக்டர் மற்றும் நடிகர் சுந்தர் சி, தமன்னா, ராஷிக்கண்ணா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்த படம் 2 மாதங்களுக்கு மேல் தாமதமாக வெளியாகிறது.

இயக்குனர் சுந்தர் சி இதுவை அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 என 3 படங்களை இயக்கிய நிலையில் இந்த படம் அதன் 4வது பாகமாக வெளிவருகிறது. படத்தின் கதை மையமாக அரண்மனையாக இருக்குமே தவிர, கதாபாத்திரங்களும், கதைகளும் படத்துக்கு படம் வேறுபடும். கதையின் தொடர்ச்சியாக மற்றொரு படம் இருக்காது என்பது, இந்த படங்களின் வெற்றிக்கு காரணமாகிறது.

- Advertisement -

சுந்தர் சி, மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முறைமாமன், மேட்டுக்குடி, நாம் இருவர் நமக்கு இருவர், உனக்காக எல்லாம் உனக்காக, வின்னர் என நிறைய காமடெி படங்களை தந்தவர். இவரது மிகப்பெரிய வெற்றியே காமெடி படங்கள்தான். அதில் காதல், பாசம், குடும்ப உறவுகள் என கலந்து கட்டி தன் படங்களை ஜனரஞ்சகமாக தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

அதே நேரத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த அருணாசலம் படத்தையும் சிறப்பாக தந்தார். 30 நாளில் 30 கோடி செலவு செய்ய வேண்டும் என்ற கான்செப்டில் இந்த படத்தின் பல காட்சிகள் மிக சுவாரசியமாக இருந்தன. அதே நேரத்தில் மிக கனமாக, அழுத்தமான கமல் நடிப்பில் அன்பே சிவம் படத்தையும் சிறப்பாக இயக்கியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சுந்தர் சி, அரண்மனை போன்ற பேய் படங்களை இயக்குவது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் எழுந்தது. ஏனெனில் காதல், காமெடி படங்களை தராமல் சுந்தர் சி இப்படி திகில் படங்களில் ஆர்வம் காட்டுவது பலருக்கு ஆச்சரியத்தை தந்தது. இதற்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குஷ்பூ பதில் தந்திருக்கிறார்.

என் கணவர் அரண்மனை போன்ற படங்களை இயக்க காரணம், என் மகள்கள்தான். அவர்களுக்கு திகில் பேய் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இப்படிப்பட்ட பேய்க்கதைகளை படமாக எடுக்கிறார் என்றார். முனி, காஞ்சனா என மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்த பேய் கதைகள் தொடர்ந்து ஹிட் அடித்ததால் சுந்தர் சி, இப்படி பேய் கதைகளுக்கு ஜானர் மாறினாருன்னு உண்மையை சொல்லாம, அரசியல்வாதி குஷ்பூ பொய் பேசிட்டாங்களே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்