- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படத்தில் பிரியா வாரியர் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அந்த நடிகையா?...

குட் பேட் அக்லி படத்தில் பிரியா வாரியர் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அந்த நடிகையா? – அட அப்போ சுல்தானா பாட்டு வேற லெவல்ல போயிருக்குமே…

- Advertisement -

கடந்த 10ம் தேதி நடிகர் அஜீத்குமார் நடிப்பில் திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி. இந்த படம் இதுவரை 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் பிளாக் பஸ்டர் மூவி என்ற பெருமையை குட் பேட் அக்லி படம் பெற்றிருக்கிறது. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஒரு படத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலேயே நடிக்க நடிகர் அஜீத்குமார் முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஏனெனில் வருகிற அக்டோபர் மாதம் வரை நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் பங்கேற்க இருக்கிறார். அதனால் நவம்பரில் அவர் சென்னை திரும்பும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார். பிறகு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க சென்று விடுவார். அதனால் 5 மாதங்களுக்குள் அவரது அடுத்த படம் முடிக்கப்பட வேண்டும்.

குட் பேட் அக்லி படத்தை பொருத்த வரை இது ஏகே ரசிகர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட படம். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக காட்சிக்கு காட்சி அஜீத்குமாரின் புகழ் பாடும் ஒரு படமாக இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். ஏனெனில் அவரே அஜீத்குமாரின் மிக மிக தீவிரமான ஒரு ரசிகராக இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் தாஸ் நடித்திருந்தார். அவருடன் ஒரு பாடல் காட்சியில் நடிகை பிரியா வாரியர் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடல் காட்சிக்கு சிறப்பாக நடனமாடியிருந்தார். இந்த பாடல் காட்சி படம் பார்த்த ரசிகர்களுக்கு பெரிய வைப்பை ஏற்படுத்தி இருந்தது. எதிரும் புதிரும் என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு ராஜூ சுந்தரம் சிம்ரன் அசத்தலாக நடனமாடியிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரியா வாரியர் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஸ்ரீலீலாதான். ஆனால் அவர் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதன்பிறகு தான் அந்த கேரக்டரில் பிரியா வாரியரை ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்க வைத்திருக்கிறார். ஒருவேளை நடனத்தில் அசத்தி வரும் ஸ்ரீலீலா இந்த படத்தில் நடித்திருந்தால், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் காட்சி இன்னும் பல மடங்கு வைப்பை ஏற்படுத்தி இருக்கும்.

- Advertisement -

சற்று முன்