இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி படத்தை எடுப்பதற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியானது. ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக இது உருவாகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம், இதனை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையை கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக எழுதி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
தனது முந்தைய திரைப்படங்கள் போல் இல்லாமல் இதனை சோதனை முயற்சியில் அவர் கையில் இருக்கிறார். கடந்த முறை லியோ படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் போதே அதற்கான படம் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். நிச்சயமாக இது எல் சி யூ வில் வராது என்றும் அவர் அறிவித்திருந்தார்.
வரும் ஜூலை மாதம் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் பணிகள் தொடங்குகின்றன. இப்படியான சூழலில் படத்திற்கான போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் கை முழுக்க வாட்ச்சுகளை அணிந்து கொண்டு கண்ணாடி போட்டு சிரித்தபடியே நின்று கொண்டிருந்தார் ரஜினி.
முதல் போஸ்டரே பலருக்கும் பிடித்திருக்க, படத்தின் டைட்டில் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்தும் கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு ஈகிள் என பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ரஜினியின் 171 வது திரைப்படம் ஹாலிவுட் படத்தின் தழுவலாக எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற திரைப்படத்தை மையமாகக் கொண்டு லியோ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இப்படியான சூழலில் தற்போது அவர், The Purge என்ற படத்தை மையமாக வைத்து ரஜினியின் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





