- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென விக்ரமை சுற்றி வளைத்த ரசிகர்கள்... வீடியோ பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீயான்... வீர தீர...

திடீரென விக்ரமை சுற்றி வளைத்த ரசிகர்கள்… வீடியோ பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீயான்… வீர தீர சூரன் சூட்டிங்கில் நடந்தது என்ன?…

- Advertisement -

ஒரு காலத்தில் வரிசையாக வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த சீயான் விக்ரம் தற்போது, ஒரே ஒரு பிளாக் பஸ்டர் வெற்றிக்காக தடுமாறி வருகிறார். எப்படியாவது தங்கலான் திரைப்படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று அவர் நம்பி இருக்கிறார்.

 

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் உருவாகி இருக்கிறது. சுதந்திர காலகட்டத்திற்கு முன்பாக, ஆங்கிலேயரின் ஆட்சி பிடியில் கோலார் தங்க வயலில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கதையை இது கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் சாதிய அடக்குமுறைகளையும் தங்கலான் திரைப்படம் பேசுகிறது.

 

- Advertisement -

இதற்காக நடிகர் விக்ரம் பெரிய அளவில் மெனக்கெட்டு இருக்கிறார். அவரது கெட்டப்பே பலரும் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. நீண்ட தாடி, ஏறிய நெற்றி, மேலாடை இல்லாமல் வேட்டியுடன் தோற்றம், கையில் கம்பு என கம்பீரமாக அவர் காட்சியளித்திருந்தார். இது மட்டுமல்லாமல் படத்தின் டீசரும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து, பசுபதி, மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட செலவில் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதன் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஜூலை மாதம் தங்கலான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து தற்போது சீயான் விக்ரம், இயக்குனர் அருண்குமார் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்குமார், சேதுபதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடைசியாக அவர் எடுத்த, சித்தா திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விக்ரமை வைத்து அவர் எடுக்கும் திரைப்படத்திற்கு, வீர தீர சூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

மளிகை கடை நடத்தி வரும் வியாபாரியாக இதில் விக்ரம் நடிக்கிறார். முதலில் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அருண்குமார் திட்டமிட்டுள்ளார். இதில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அப்போது விக்ரமை சுற்றி, ஏராளமான ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விக்ரம், உங்கள் அன்புக்கு நான் என்றும் அடிமை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்